பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் பேராசிரியம் : (இ-ஸ்) இவ்விரு பெயரும் யாட்டிற்கேயுரிய பெண்மைப் பெயர் எ-று. இவை இப்பொழுது வழக்கினுள் அரிய ஆய்வுரை : (இ-ன்) மூடு, கடமை என்ற பெண்மை பற்றிய மரபுப் பெயர் இரண்டினையும் ஆடல்லாத மற்றைய உயிரினங்கள் பெற்று வழங்கா. எனவே இவ்விரு பெயர்களும் யாட்டிற்கே உரியன எ-று. 'இவை இப்பொழுது வழக்கினுள் அரிய என்றார் பேராசிரியர். இச்சூத்திரத்திற் கடமை என்றது, பெண்மை பற்றிய மரபுப் பெயரினை, கடமை என்ற பெயர் ஒரு சாதி விலங்கினைக் குறித்த பெயராகவும் இவ்வியல் உக - ஆம் சூத்திரத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது. எனவே கடமை என்ப தனைப் பலபொரு ளொரு சொல்லாகக் கொள்ளுதல் ஏற்புடைய தாகும். (சுடு} சுசு. பாட்டிஎன்ப பன்றியும் நாயும் இளம்பூரணம் : (இ-ள்) பாட்டி2 என்னும் பெயர் பன்றியினது உம் நாயி னதுTஉம் பெண்பெயர்க்குரிய என்றவாறு. சுள. நரியும் அற்றே3 நாடினர் கொளினே. இளம்பூரணம் : - (இ-ள்) நரியும் பெண்பாற்குப் பாட்டி என்னும் பெயர் பெறும் என்றலாறு. 1. யாட்டிற்குரியவாய் வழங்கிய முடு, கடமை என்னும் பெண்மைப் பெயர்கள் பேராசிரியர் காலத்திலேயே வழக் கினுள் அரியவாயின எனத் தெரிகிறது. 2. பாட்டி என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர் 3. அற்றே - அத்தன்மையதே. பாட்டி என்னும் பெண்மை பற்றிய பரபுப்பெயரைப் பெறுந் தன்மையதே.