பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔科 தொல்காப்பியம் பேராசிரியம் : - (இ-ள்) பாட்டியென்று சொல்லப்படுவன பன்றியும் நாயும்' நரியும் (எ-து). பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பாட்டி என்னும் பெண்மைப்பெயர் பன்றிக்கும் நாய்க்கும் உரியதாய் வழங்கும் எ-று. 'பாட்டி நாய் போல நின்று' (4 78-3) என்பது அப்பர் தேவாரம். பாட்டி என்னும் இப்பெண்மைப் பெயர் இவ்வியலில் எடுத்துரைக்கப்படாத முதுமையையும் குறிப் பினால் உணர்த்தி நின்றமை ஒர்க. (கன்சு) (இ-ள்) ஆராய்ந்து கொள்ளுங்கால் நரியும் பாட்டி’ என்னும் பெண்மைப்பெயர் பெறுதற்கு உரியதாகும். (எ-று) (கள்) சு.வு. குரங்கு முசுவும் ஊகமும் மந்தி. இளம்பூரணம் : (இ-ள்) குரங்கு முதலாயின மூன்றும் பெண்பால் மந்தி’ என்னும் பெயர் பெறும் என்றவாறு. இத்துணையுங் கூறப்பட்டன பெண்பாற் பெயராவன : யானையுட் பெண்-பிடி, ஒட்டகம்-பெட்டை, குதிரை-பெட்டை, கழுதை-பெட்டை மரை-பெட்டை நாகு, ஆ, புள்ளு-பெட்டை பேடை, பெடை, கோழி-அளகு, கூகை, மயில்-அளகு, புல்வாய்பிணை, பிணா, பிணவு, பினவல்: நவ்வி-பிணை: உழை, கவரிபிணை; பன்றி-பிணவு, பினவல், பாட்டி; நாய்-பினவு, பினவல், பாட்டி பெற்றம், ஆ, நாகு, எருமை-ஆ, நாகு: மக்கள்-பெண் பிணவு, நந்து-நாகு, ஆடு-மூடு, கடமை, நரிபாட்டி, குரங்கு-முசு, ஊகம், மந்தி எனவரும். 1. இவ்விரு சூத்திரங்கட்கும் பொருளியைபு நோக்கி ஒன்றாய் உரைவரைந்தனர் பேராசிரியர். பன்றி, நாய், நரி என்பன பாட்டியென்னும் பெண்பாற்குரியன என்பதாம். மந்தி என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். இது குரங் கின் இனத்துக்கே சிறப்புரிமையுடைய பெண் பெயராகும்.