பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器轮 தொல்காப்பியம் தின் மாறுபட்டு வருவன வழக்கினுஞ் செய்யுளினும் அடிப்பட்டு வரின் வழுவென்று கடியப்படா வென்றவாறு. பேராசிரியம் : இது மரீஇவந்து முடிந்த மரபுணர்த்துதல் துதலிற்று. (இ-ன்) ஆண் குரங்கினைக் கடுவனென்றலும், மரப் பொதும்பினுள் வாழுங் கூகையைக் கோட்டானென்றலும், செவ்வாய்க் கிளியைத் தத்தையென்றலும், வெருகினைப் பூசை யென்றலும், ஆண் குதிரையைச் சேவலென்றலும், இருணிறப் பன்றியை ஏனமென்றலும், எருமையேற்றினைக் கண்டியென்ற லும், அவ்வாறு முடிந்த வழக்குண்மையிற் கடியப்படா கடப் பாடு அறிந்தோர்க்கு (எ-று). ' கடுவனு மறியுமக் கொடியோ னையே’’ (குறுந் : 26) ஆண்குரங்கு இதனைக் கடியலாகா'தெனப்பட்ட இழுக் கென்னையெனின் - மக்கட்கும் வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றனபோலுமாதலின். கூகையைக் கோட்டானென்றலும் வழக்காகலான் அமையும்; மரம்பயில் கூகை'யென்ற தென்னை யெனின், மரக்கோடு விடாமையிற் கோட்டானென்னும் பெயர் பெற்றதென்றற்கு தத்தையென்பது பெருங்கிளியாதலின் சிறு கிளிக்கும் அப்பெயர் கொடுத்த லமையுமென்றவாறு. செவ்வாய்க் கிளியென்றதனைச் சிறுகிளிமேற் கொள்க. 1. கடுவன் என்னும் பெயர், அக்காலத்து மக்கட்பெயராயிருந்து பின்னர்க் குரங்கினுள் ஆணுக்குரியதாயிற்று எனவும், வெருகு என்ற பெயரும் முன்னர் மக்கட் பெயராயிருந்து பின்னர்ப் பூனைக்குரியதாயிற்று எனவும், மரத்தின் கிளையைத் தான் வாழுமிடமாகக் கொண்டது கூகையாதலின் கோட்டான் என்ற பெயர்க்குரியதாயிற்று எனவும், தத்தை என்ற சொல் பெருங்கிளியையும் செவ்வாய்க்கிளி என்ற சொல் சிறுகிளியை யையும் குறிக்குமெனவும் தோட்டங்களிலும் வேலியிலும் மறைந்திருந்து வேற்றுயிர்களின் மாமிசத்தை உண்ணுதற் றொழிலுடைமையால் வெருகு (காட்டுப்பூனை) வெவ்வாய் வெருகு எனக் கூறப்பட்டதெனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் மனங்கொளத் தருவதாகும். கடுவிசையாற் பறப்பது போன்று விரைந்து செல்லுமியல் பினையுடையது குதிரையாதலின் அது சிறகுடைய சேவல் என்னும் பெயர்க்குரியதாயிற்று. 2