பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵莎 தொல்காப்பியல் ఫీ ష్రి ளின் நிறம் வாய்ந்த பன்றியை ஏனம் என்று கூறுதலும், எருமையேற்றினைக் கண்டியென்று கூறுதலும் இவ்வாறு உலக வழக்கினுள் மரபுப் பெயர்களையே இனப்பெயர்களாக ஒன்றுபடுத்தி வழங்கப்படும். அவ்வழக்கு என்று கூறுதலும், இ காணப்படுதலால் வழக்கியல் முறையுணர்ந்தோரால் மேற்குறித்த மரபுகள் விலக்கப்படா எ-று. கடுவன் என்பது ஆண்மைகுறித்த மரபுப்பெயர் இது குரங்கினத்துள் ஆணுக்குரியதாகும். கூகை - ஆந்தையில் ஒரு வகை; இது, மரக்கிளையில் வாழும் இயல்பினதாதலின் கோட் டான் எனப் பெயர் பெறுவதாயிற்று என்பார், மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் என்றார். கோடு - மரக் கிளை. தத்தை என்பது பெருங்கிளியென்றும், செவ்வாய்க்கிளி' என்பது சிறுகிளியென்றும் கூறுவர் பேராசிரியர். படப்பை வேலி யும் புதலும் ஆகிய இடங்களில் மறைந்திருந்து ஊனுணவுக்குப் பிற வுயிர்களைக் கவர்ந்து உண்ணும் இயல்புடையது 'வெருகு' எனப் படும் காட்டுப்பூனை. பூசை என்பது வீடுகளில் வாழும் பூனை. இல்லுறை பூனைக்குரிய பூசை என்னும் பெயரினைக் காட்டுப் பூனையாகிய வெருகிற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப் பட்டதாகும் பூசை பூளுை எனவும் வழங்கும். சேவல் என்னும் ஆண்பாற்பெயர் சிறகொடு பொருந்திய பறவைக்கே சிறப்புடைய தாயினும், பறவை வானத்திற் பறப்பது போன்று மேலே துள்ளி விரைந்தோடும் இயல்புடையது. உள்ளம்போல உற, வளியுதவும் புள்ளியற்கலிமா (தொல் - கற்பியல் - டுக எனப்படும் குதிரை யாதலின், குதிரையுள் ஆனினைச் சேவல் என வழங்கும் வழக்கு நாட்டில் நிலை பெறுவதாயிற்று. அவ்வழக்கு இக்காலத்து அரி தாயிற்று என்றார் பேராசிரியர். ஆண் எருமையினைக் கண்டி என வழங்கும் வழக்கமும் இக்காலத்து அரிதாயிற்று. ' கடனறிந் தோர்க்குக் கடியலாகா' என்ற இப்பரிகாரத் தானே, கோழியை வாரணம் என்றலும், வெருகினை விடை’ என்றலும் போல்வன பலவும் கொள்ளப்படும். என்றார் பேராசிரியர். இவ்வுரைத் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் விடை’ என்பது போல வாரணம்’ என்பதும் ஆண்மை பற்றிய மரபுப் பெயராதல் வேண்டும் என்பது புலனாகின்றது. முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கும் புறஞ்சிறை வாரணம் ” (சிலப். - நாடுகண்)