பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உசு #

உஎ தோழிக் காயின் நிலம்பெயர்ந்துரையாது.

இளம்பூரணம்

என்-எனின். இது தோழியுவமை கூறுமாறு உணர்த்துதல் துதலிற்று. -

(இ- ள். தோழி உவமைசொல்லின் அந்நிலத்தினுள்ளன வன்றிப் பிறநிலத்துள்ளன. கூறப் பெறrள் என்றவாறு."

உரையாது உவமம் என ஒருசொல் வருவிக்க. உதாரணம் தோழி கூற்றுட் காண்க. (உ.எ)

பேராசிரியம்

இது மேற்கூறிய உள்ளுறையுவமைக் காவதோர் இலக்கணம்.

(இ ள்.) ஐந்து வகைப்பட்ட உவமப்போலியும் பிறிதொடு படாது பிறப்பு நோக்கி உணரக் கூறியவழி அக்கூற்றுத் தலை மகட்குத் தோழிக்கும் உரித்தாங்கால், தலைவிக்காயின் அவனறியுங் கருப்பொருளானே செய்யல் வேண்டும்; தோழிக்காயின் அந்நிலத் துள்ளன. வெல்லாஞ் சொல்லவும் பெறும்; பிறநிலத்துள்ளன அறிந்து சொல்லினளாகச் செய்யுள் செய்யப்பெறார் (எ - டி).

இதனது பயம் தலைமகள் இந்நிலத்துள்ளன. வெல்லாம் அறியுந் துணைப் பயிற்சியில ளெனவும், அவளாயத்தார்ாயின் இந்நிலத்துள்ளன அறியச் சிதைந்த தின்றெனவும் கூறியவாறு."

"ஒன்றே னல்லெ னொன்றுவென்' (குறுந், 208)

1. தோழி உவமை கூறுங்கால் தான்பழகிய கிலத்திலுள்ளனவற்றையே

உவமை கூறு தற்குரியள் என்பதாம்.

உத, உள இவ்விரண்டினையும் ஒரு சூத்திரமாகக் கொள்வர் பேராசிரியர்

2. இச்சூத்திரத்தின்பயன், தலைவி தன்னிலத்துள்ளன எல்லாவற்றையும் அறியும் பழக்கமில்லாதவள் எனவும் அவளுடைய தோழிமுதலிய ஆயத்தாராயின் அவர் வாழும் கிலத்துள்ளனவற்றையறிந்து கொள்ளுதலால் வரும் குற்றமெதுவும் இல்லையெனவும் அறிவித்தலாகும்.