பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಘ್ನ? தொல்காப்பியம் - பொருளதிகாரம்

என்னும் பாட்டினுட், பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை மரம் படப்பையிலுள்ள தாகலானுந் தன்னாற் பூக்கொய்யப்படு மாதலானும் அஃது அவளறிகிளவி யெனப்பட்டது. ”

"தன் பார்ப்புத் தின்னு மன்பின் முதலை’ (ஐங்குறு. 41)

என்பது தோழி கூற்று. என்னை? அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே தலைமகள் பெரும் பேதையாதலினென்பது. 3 அதிகாரத்தானின்ற உள்ளுறையுவமை யென்பதனை அவளறி கிளவி யென்றதற்குப் பெயர்ப்பயனிலையாகவும், நிலம்பெயர்ந் துரையாதென்னும் முற்றுவினை க்குப் பெயராகவும் வேறு வேறு சொல்லிக்கொள்க. * {ર-ક્ત)

ஆய்வுரை

இவ்விரு நூற்பாக்களையும் ஒன்றாகக்கொண்டு

ു_6് {് வரைந்தார் பேராசிரியர்.

இது மேற்குறித்த உள்ளுறை கூறுதற்குரியாருள் தலை வியும் தோழியும் அடங்குவர் எனவும் அவர் கூற்றிலமைதற்குரிய பொருட்பகுதி இவையெனவும் உணர்த்துகின்றது. (இ- ள்) தலை மகள் உள்ளுறையுவமங்கூறின் அவளறிந்த பொருள் பற்றிக் கூறப்படும். தோழி கூறுவாளாயின் அவள் கூற்றில் அவள் பயின்ற நிலத்தில் உள்ளனவன்றிப் பிற நிலத்துள்ளன இடம்பெறச் செய்யுள் செய்யப்பெறுதல் இல்லை.(எ- று) -

&

1. படப்பை - தோட்டம்.

2. பொருகளிறுமிதித்த கெரிந்த அடியையுடைய வேங்கைமரம் தலைவியின் தோட்டத்திலுள்ளதா தலானும் அவளாற்பூக்கொய்யப்படுவதாதலாலும் அவளறியும் கருப்பொருளாயிற்று.

3. "தன் பார்ப்புத்தின் னும் அன்பில் முதலை’ (ஐங். 208) என்பது, தோழி கற்று என்னை ? தலைமகள் பெரும்பேதையா தலின் அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே என்பது' என இவ்வுரைத்தொடரை இயைத் துப்பொருள் காண்க.

4. கிழவிசொல்லின் அவளறி கிளவி உள்ளுறையுவமை எனவும், தோழிக் காயின் உள்ளுறையுவமை கிலம்பெயர்ந்துரையாது’ எனவும் உள்ளுறையுவமை" என்பதனை முறையே பெயர்ப்பயனிலையாகவும் எழுவாய்ப்பெயராகவும் அதிகாரத் தால் இருமுறை வருவித்து இருவேறு தொடராக இயைத்துரைக்க என்பதாம்.