பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கல்

இறு துறுகிளவியாவது, இன்பவுணர்வாகிய மகிழ்ச்சியினைப் புலப்படுத்துஞ் சொல். துனியுறுகிளவியாவது, பிரிவும் புலவியும் ஆகிய துன் பவுணர்வினைப் புலப்படுத்துஞ் சொல்.

ங்க கிழவோட் குவமை ஈரிடத் துரித்தே

இளம்பூரணம்

என்- எனின், தலைமகள் உவமை கூறுமிடன் உணர்த்

துதல் துதலிற்று.

(இ-ள்.) தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட

இரண்டிடத்தும் உரித்து என்றவாறு.*

எனவே, இரண்டும் அல்வழி உவமை கூறப்பெறாள் என்ற

வாறாம். (ங்க)

பேராசிரியம்

இஃது, அவ்வுள்ளுறையுவமையை வரையறுத்துணர்த்துதல் துதலிற்று.

(இ-ஸ்.) தலைமகள் இரண்டிடத்தல்லது உள்ளுறையுவமை சொல்லப்பெறாள் (எ-று).

இரண்டிடமென்பன: மருதமும் நெய்தலும், அந்நிலத்துப் பிறந்த பொருள் பற்றியல்லது உள்ளுறையுவமஞ் சொல்லுதல் கிழத்திக்குரித்தன்றென்பது கருத்து. இவ்விடத்து உரிமை யுடைத்

1. சரிடம் என்பன, இனிதுறு கிளவியும் துணியுறு கிளவியும் என மேற்குத் திரத்திற் குறிக்கப்பட்ட இரண்டிடம்.

இதற்குக் 'கிழவோட் குவமம் பிரிவிடத்துரித்தே' எனப்பாடங்கொண்டு உரை வரைக் தாரும் உளரென்பதும் அப்பாடம் அத்துணைப் பொருட்பொருத்த. முடைத்தன்றென்பதும் கிழவோட்குவமம் ஈரிடத்துரித்தே' என இளம்பூரணர் கொண்ட பாடமே வலியுடைத்தென்பது இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் எழுதிய

வுரையாற் புனைாம் ,