பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பேராசிரியம்

மேல் உரனொடு கிளக்கும்’ (தொல். பொருள் 02) என்ற தல்லது இன்னவழிச் சொல்லப்பெறுந் தலைமகனென் றிலன், அதனான் அவற்கு எல்லா நிலனும் உரியவாமென்கின்றானென்பது '

(இ - ள்) தலைமகற்கு இடவரையறை இல்லை (எ - று).

வரையறையில்லவற்றுக்கு வரையறை கூறாமே மூடி, யாவோவெ னின், அங்கனமாயினுங் கிழத்திக்குந் தோழிக்கும் இடம் வரையறுத்ததனைக் கண்ட மாணாக்கன் இவ்வாறே தலைமகற்கும் இடம் வரையறை யுண்டுகொலென்று கருதிற் கருதற்கவென்றற்கு இது கூறினானென்பது.? (6.0)

ஆய்வுரை

இது மேற்குறித்த உள்ளுறையுவமையில் இடம்பெறும் பொருள் வேறுபாடு பற்றிய சொல்வகை உணர்த்துகின்றது.

(இ - ள்) இன்பத்தினை விளைக்குஞ்சொல்லும் துன்பத்தினைப் புலப்படுத்து ஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்றும் 5 - ஐ.

இனிதுறுகிளவியாவது, இன் பவுணர்வாகிய மகிழ்ச்சியினைப் புலப்படுத்துஞ் சொல். துனியுறுகிளவியாவது, பிரிவும் புலவியும் ஆகிய துன் பவுணர்வினைப் புலப்படுத்துஞ்சொல்.

1. ஆசிரியர் தோல்காப்பியனார் மேல் இவவியல் உ எ - ஆம் நூற்பா வில் தலைவன் தன் உரனுடைமைதோன்ற உள்ளுறையுவமம் க துவான் எனக் கூறிய தல்லது,இன்ன கிலத்துக் கருப்பொருள் பற்றிச்சொல்லப்பெறும் எனக் கூறினாரல்ல . தலைவனுக்கு எல்லா கிலத்துக்கருப்பொருள்களும் உள்ளுறை கூறுதற்குரியவாம் என ஆசிரியர் இச் சூத்திரத்தால் தெளிவுபடுத்துகின்றார் என்பதாம்,

2. வரையறையில்லாதவற்றுக்கு வரையறை கூறாமேமுடியுமாயினும் தலைவிக

கும் தோழிக்கும் உள்ளுறைகூ முதற்கு இடம் வரை யதுத்ததனை க் கண்ட மானாக் கன் தலைவனுக்கும் இத்தகைய வரையறையுண்டோ எனக் கருதுதல் இயல்பா தலின் அங்ாவனம் கருதற்க எ ன் பார், "தலைமகற்கு இடவரையறையில்லை' என்பது ப2.

ச்சூத்திரத்தை இயற்றினார் தொல்காப்பியனார் என்பதாம்.