பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா க.க. கல்1.

£伊、 தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

t # ருந்து * கூறுதற் குரியர் கொள்வழி யான. .

இளம் பூரணம்

(இ-ள்) தோழியுஞ் செவிலியும் உவமை கூறுங்காற் பொருந்துமிடம் பார்த்துக் கூறுதற்குரியர் கேட்டோர் கொள்ளு நெறியான் என்றவாறு.

  • பருதியஞ் செல்வன் விரி கதிர்த் தானைக்

கிருள்வளை வுண்டமருள்படு பூம்பொழில். '

என வரும். பிறவுமன்ன..மேற்காட்டினவற்றுள் கண்டு கொள்க, (ங்க)

31, អ៊ឺហ៊u ធំ

இது, தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங் கூறுமிட முணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறையுவமங் கூறப்பெறுப தோழியுஞ் செவிலியும் (எ-று).8

காலமுமிடனும் பொருந்துதலென்பது வெளிப்படக் கிளவாது முன்னத்தான் மறைத்துச் சொல்ல வேண்டிய வழி அவ்வாறு சொல்லப் பெறுப அவரு மென்றவாறு. இங்ங்னங் கூறவே.

“ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே’’ (302)

என்றவழி, எல்லாரும் உள்ளுறையுவமஞ் சொல்லப் பெறுவ ரென்பது பட்டது. அதனை நற்றாயும் ஆயத்தாருந் தந்தையுந் தன்னையரும் உள்ளுறையுவமை கூறப்பெறாரெனவுந், தோழி கூறின் நிலம் பெயர்ந்துறையாத பொருளான் ஒருவழிக் கூறுமெனவும்

1 பொருந்து வழி - பொருந்துமிடம்.

கொள் வழியான - கேட்டோர் மனங் கொள்ளும் நெறியால் 2. பருதியஞ்செல்வன்’ என இவ்வுரையிற்கானப்படும் இலக்கியமேற்கோள்

அடுத்த சூத்திரவுரையில் இடம் பெற்றுள்ளது. அஃது இங்கு இச்சூத்திரப்பொரு ளொடு தொடர் பின் றிக் காணப்படுதல் ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகும். 3. "தோழியும் செவிலியும் பொருக்துவழி நோக்கிக் கொள் வழியான (உள்ளுறை யுவமம்) கூ அதற்குரியர்" என இயைத்துப்பொருள் கொள்க. 4. அவரும் அவ்வாறு சொல்லப்பெறுப' என இயையும்.