பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கங் க)இ.

தகுமென்று அந்நாட்டினது வளமை கூறினமையினென்பது. தோழி பொருந்தியவழிக் கூறுமாறு முன் காட்டப்பட்டன. செவிலி பொருந்து வழிக் கூறுவனவுங் கண்டுகொள்க. இலக்கண முண்மையின் அவையும் உளவென்பது கருத்து. (ங்க)

ஆய்வுரை

இது, தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங்கூறுதற்குரிய இடம் உணர்த்துகின்றது. (இ-ள்) தோழியுஞ் செவிலியும் காலத்திற்கும், இடத்திற்கும் கூறக்கருதிய பொருட்கும் பொருந்துமாறு நோக்கிக் கேட்போர் உய்த்துணர்ந்துகொள்ளுதற்குரிய நெறியால் உள்ளுறை யுவமம் கூறுதற்குரியர் எ-று.

பொருந்துவழிநோக்கிக் கொள்வழியான (உள்ளுறையுவமம்) கூறுதற்குரியர் என இயையும், உள்ளுறையுவமம் என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. இவ்வாறு அகத்தினையொழுகலாற்றில் உள்ளுறையுவமம் கூறுதற்குரியார் இன்னின்னார் எனவிதந்து எடுத்தோதவே இங்குக் கூறப்படாத தலைமகள் தாயாகிய நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன்மாரும் உள்ளுறையுவமை கூறப்

1. சோழன் குளமுற்றத் துத் துஞ்சியகிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய

42-ஆம் புறப்பாடலில் 'கெல்லறுப்பார் கடைமடைக்கண் பிடித்துக்கொண்டவாளை மீன்களும் உழுவார் படை வாளால் மறிக்கப்பட்ட ஆமையும். கரும்பினை வெட் டுவார் கருமபிபினின்றும் வாங்கப்பட்ட தேனும், பெரியதுறைக்கண் நீரை முகந்துகொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரும் என இவற்றை வன்புலத்தினின்றும் வந்த கற்றத் தார்க்கு விருந்தாக விரும்பிக்கொடுக்கும் மென்புலத்துர்களையுடைய நாட்டுக்குரிய வேந்தே' எனச் சோழநாட்டின் கருப்பொருள்களைச் சிறப்பிக்குமிடத்துச் சோழ மன்னனுடைய படை வீரர்கள் பகைவேக் தரை வெற்றிகொள்ளுங்கால் பெற்ற தத்தம் பொருள்களை அவர் தாமே விரும்பிப் பிறர் க்கு அளிப்பார் என்னும் உள்ளுறைப் பொருள் தோன்றினாலும் தோன்றும் என்பதன்றி

"தாய் சாப்பிறக்கும் புள்ளிக்கள் வனொடு

பிள்ளை தின்னுமுதலைத் தவனூர்' என அகத்தினைப் பாடலிற் கொள்ளப்படுமாறு போல உறுதியாக உள்ளுறை யுவமங் கொள்ளுதல் வேண்டுமென் றும் வரையறை இப் புறப்பாடற்கில்லை. சோழ காட்டு உழவர் முதலாயினார் வருந்தாமற்பெறும் பொருள் பிற காட்டார்க்கு விருந்து செய்யுமளவில் மிக்குள்ளன என அக்காட்டினது வளமை கூறுதலே இப் பாடலைப் படினோர் கருத்தா தலின் உள்ளுறையுவமங் கூறவேண்டிய இன்றியமை

பாமை இப்புறப்பாடற்கில்லையென்பதாம்.