பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்சு தொல் காப்பியம்-பொருளதிகாரம்

பெறார் என்பதும், இங்ஙனம் உள்ளுறையுவமங்கூறுதல் அகத்தினை. யொழுகலாற்றிற்போலப் புறத்தினையொழுகலாற்றில் அத்துணைஇன்றியமையாத தன்றாதலின், இவ்வுள்ளுறையுவமத்தினை அகத்திணைக்கே சிறப்புரிமையுடையதாகத் தொல்காப்பியனார் எடுத்தோதினாரென்பதும் நன்கு புலனாம். - t - வேறுபட வந்த உவமைத் தோற்றம்

கூறிய மருங்கிற் கொள் வழிக் கொளா அல். இளம்பூரணம்

என்-எனின், மேலனவற்றிற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்) ஈண்டு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தின் வேறுபட்டுவந்த உவமைத்தோற்றம் எடுத்தோதிய நெறியிற் கொள்ளும் வழிக் கொளுவுக என்றவாறு ,

"பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்

கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில்’’ எனவரும். பிறவுமன்ன. பேராசிரியம்

இது, மேலெல்லாம் இருவகையுவமம் கூறி இன்னும் ஏனையு வமப் பகுதியே கூறுவான் எய்தாததெய்துவித்தது.

(இ - ள் ) வேறுபடவந்த உவமத்தோற்றம் --வேறுபாடு தோன்ற வந்த உவமைச்சாதி; தோற்றமெனினும் பிறப்பெனினுஞ் சாதியெனினும் ஒக்கும்; கூறிய மருங்கிற் கொள் வழிக் கொளா

1. 'பருதியஞ்செல்வன் விரி கதிர்த்தானைக்

கிருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்’ என வரும் இத்தொடர், மணி மேகலைக் காப்பியத்திலுள்ள பளிக் கறைபுக்க காதையின் முதலிரண்டடிகளாகும். "ஞாயிற்றுச் செல்வனாகிய கதிரவனது விரிந்த ஒளிக்கற்றையாகிய சேனையால் இருள் வளைக் கப்பட்டாற்போன்று அமைந்த மருள் என்னும் இசைபாடும் வண்டுகள் பொருக்திய மலர்களை புடைய சோலை’ என்பது இத்தொடரின் பொருளாகும். இதன்கண் கதிரவனது ஒளி உள்ளே புகா வாறு செறிந்த பொழிலுக்கு இருளின் திரட்சியினை உவமையாகக் கூறவந்த ஆசிரியர், கதிரவனது ஒளிக் கற்றையாகிய சேனையால் வளைக்கப்பட்டு ஒன்றாய்த் திரண்ட இருளின் தோற்றத்தினை உவமை யாகக் கூறியமை ல் இதுவேறுபடவந்த உவம த்தோற்றமாயிற்று. கூறியமருங்கிற் கொள்வழிக்கொளலாவது, வினை பயன் மெய் உரு என முன்னர் உவமைக்கு எடுத் தோதிய நெறியாற் பொருந்தும் வழி அமைத்துக்கொள்ளுதலாகும்.

2. உவமத்தோற்றம். உவமத்தின் பிறப்பு: உவமம் தோன்றும் வகை,