பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கூச கல் எ

அல்-அங்ங்ணம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியானே கொள்ளுமிடனறிந்து கொளுத்துக" (எ - று).

கொளுவு தலென்பது கொளா அல்’ என்பதாயிற்று.

வேறுபடவருதலென்பது உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமைகூறாது பெயர்போல் வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும், tஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், !ஒப்புமை மறுத்த வழிப் பிறிதோருவமை நாட்டு தலும், உவமையும் பொருளும் முற்கூறி நிறீ இப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்றலும், உவமைக்குஇருகுணங்கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால் உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்கு க் கூறாது கூறுதலும், $ஒப்புமை குறைவுபட உவ மித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், *ஒவ்வாக்கருத்தி னான் ஒப்புமை கோடலும், tfஉவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏது வாகிய பொருட்குச் சில அடைகூறி அவ் அடையானே உவமிக்கப் படும் பொருளினைச் சிறப்பித்தலும், t;உவமானத்தினை உவமே ய மாக்கியும் அது விலக்கியுங் கூறுதலும், இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள கவத்தலும், இன்னோரன்ன வெல்லாம் வேறுபடவந்த உவமத் தோற்றம்' எனப்படும்.

இவற்றைக் கூறிய மருங்கிற் கொளுத்துதல்’ என்பது முற்கூறிய ஏனையுவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறையுவ மத்தின்பாலும் படுத்து உணரப்படுமென்பது, ஏனையுவ மத் தின் பாற்படுத்தலென்பது : வினை பயன் மெய் உரு என்ற நான்கும்பற்றி (276) வருதலும் அவற்றுக்கு ஒதிய ஐவகை 1.கொளுவுதல் - உவமையும் உவமேயமும் தம்முன் இயையும்படி பொருத்துதல்,

  • தண்டியலங்கார நூலார் இதனை விரியுவமை’ எனவும், tஇதனை உண்மையுவமை’ எனவும் இதனை மறுபொருளுவமை’

எனவும் கூறுவர். வீரசோழிய நூலார் இதனைத் தடையுவமை’ என்பர். வீரசோழிய நூலார் இதனை 'உம்மையுவமை’ என்பர். $இதனை இசையுவமை’ என்பர். “இதனைக் கருத்துவமை’ என்பர் ttதண்டியலங்கார நூலார் இதனை மோகவுவமை’ என்பர். 'இது, விலக்குவமை யின் பாற்படும். &இது வேற்றுப் பொருள் வைப்பு' என்பர். இவற்றிற்கெல்லாம் உதாரணச் செய்யுட்கள் தண்டியலங்கார வுரையிலும், வீரசோழிய வுரையினுங் காண்க.