பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் ایران به

நிலைக்களனும்பற்றி (279-280) வருதலுமென்க் கொள்க. உள் ளுறையுவமத்தின் பாற்படுத்தலென்பது; இவ்வேனையுவமம்போல உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்க வாராது குறிப் பினாற் கொள்ளவருதலின் இக்கருத்தினானே இதனை ஈண்டு வைப்பானாயிற்று வரலாறு:

“வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்

போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப வொடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் கடத்தடு தானைச் சேர லாதனை யாங்ங்ண மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைத் தொளித்தி அகலிரு விசும்பி னானும்

  • பகல்விளங் கலையாற் பல்கதிர் விரித்தே' (புறம். 8)

என்னும் பாட்டினுள் 'கடந்தடு தானைச் சேரலாதனை” என்னுந் துணை உவயத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ள வைத்தானென்பது. என்னை? "வெஞ்சுடர் வழி' என்னுந் துணை உவமத்திற்குரிய அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ள வைத்தானென்பது. இனிப் 'பொழுதென வரைதி' என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவ மத்திற்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது, என்னை? வெஞ்சுடர் வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு பழிப்பான்? பொருளே

  • புறநானூற்றுரையாசிரியர் 'பகல்விளங்குதியால்' என்று பாடங்கொண்டு

வீங்கு செலன் மண்டிலத்தை ஞாயிற்று மண்புலமெனக் கொள்கின்றார்,

1. வெஞ்சுடர் வழித்தோன்றிய சேரலாதன் உவமம். 'வயங் காவலர் வழி மொழிக்தொழுக’ என்பது முதல் கடந்தடுதானை' என்பதுமுடிய உவமத்திற்குரிய அடையாகும். இவ்வடையினை வீங்குசெலல் மண்டிலமாகிய உவமேயத்திற்கு எதின் மறுத்துக் கொள்ள வைத்தார்.

2. என்னை ? ...... வைத் தானென்பது" எனவரும் இவ்வுரைத்தொடர் பொருட் டொடர் பின்றி ஏடெழுதுவோரால் இடையிற் சேர்க்கப்பெற்றதெனத் தோன்றுகிறது. இதனை நீக்கிப் படிக்கப் பொருள் இனிது புலனாதல் காண்க.

3. "தண்சுடரோடு பழிப்பான் என்பதனைத் தண்சுடரோடுவமிப்பான் எனத்

திருத்திக் கொள்க.