பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிக

உவமையியல்-நூற்பா கூச

உவமஞ் செய்தனர் மொழியினு’ (234) மென்றதனாற் பொருளினை உவமையாகக் கூறாது உள்ளுறையுவமம் போலக் கொள்ள வைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாயவற்றுள்,

  • வையங் காவலர் வழிமொழிந் தொழுக’’

என்றான்.

வழி மொழிதலென்பது : வேற்றரசர்க்குத் தம்தன்மையென வேறின்றித் தன்னகப்படுத்தல்; ஆகலான், தத்தம் ஒளியொடு படுத்தது, ஒழிந்த கோளுஞ் செல்லத் தானுஞ்செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங்கூறிக் குறிப்புப்பட வைத்தானென்பது.

'போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது’’

எனவே, இன்பநுகர்வு முற்றுச்சிறப்பில்லாக் கட்டுரை யெய் தானெனவும் அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழு வர் மகளிரொடு போகந்துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையு மென்றும் எதிர்மறுத்துக் கொள்ளவைத்தான். சிறப்பின்மையென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ்செய்யாது உரோகிணி.மேற் கழி பெருங் காதலனெனப்படுதல் போல்வன.

'இடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப’’

எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும் மதிமண்டில மென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். ஒடுங்காவுள்ளம்’ எனவே, அம்மதியம் தேய்ந்தொடுங்குமென்பது கொள்ளப்படும். ஒம்பா விகை’ எனவே, நாடோறும் ஒரோவொரு கலையாகப் பல்லுயிர்க் கும் இன்பம் பயக்கு மாற்றால் தருவதல்லாது தானுடையவெல்லாம் ஒருகாலே கொடாத மதியமெனப்படும். கடந்தடு தானை” எனவே, மதிக்குத் தானையாகிய தரா கையெல்லாம் பகைக்கதிராகிய பரிதி மண்டிலத்துக்குத் தோற்குமென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர்மறுத்துக்கொள்ளப்பட்டன.