பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉல் தொல்காப்பிய ம்- பொருளதிகாரம்

ஈண்டு உலகு புரப்பது மாரியும் உண்டு எனப் பாரிக்கு உவமை யாகிய மாரியின் தன்மை உள்ளவாறு கூறப்படுதலும் இத்தகைய உவமத்தன்மை மாரியால் விளைக்கப்படும் பயனும் பாரியால் விளைக் கப்படும் பயனும் ஒத்த பயனிலையுவமைக்கண் இடம் பெற்றுள்ளமையும் காண்க.

இந்நூற்பாவிற் கூறப்படும் உவ மத்தன்மையென்பது, ஒரு பொருட்கு விகார வகையாற் பெருமையுஞ்சிறுமையும் பற்றி உவமை கூறாது இயல்பு வகையால் உவமங் கூறுதல் எனவும், அவ்வாறு இயல்பாக உவமங் கூறுதல் ஒரு பயன்தோன்றச் சொல்லும் முறைமைக்கண் இடம் பெறும் எனவும், பாரிபாரி' என வரும் புறப் பாட்டினுள் உலகினைப் புரத்தற்கு மாரியும் உண்டு’ என்று மாரியை உவமை கூறிச் சிறப்பித்துப் பாட்டுடைத்தலைவனாகிய பாரியை உயர்த்துக் கூறாதான்போல இயல்பினால் உவமை கூறினான் எனவும் பட்டாங்கமைந்த உவமையாகிய இது, மாரிக்கும் பாரிக்குமிடையே எத்தகைய தாழ்வும் இல்லை யென்னுந் தன்மையைப் பாட்டுடைத் தலைவனது உயர்வு கூறுதலின் பயனிலை புரிந்த வழக்கெனப்படும் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் இளம்பூரணர் உரைக்கமைந்த உரைவிளக்கமாக அமைந்துள்ளமை கூர்ந்துணாத் தகுவதாகும். -

க.எ. தடுமாறு வரலும் கடிவரை வின்றே. இளம்பூரணம்

என்.-51ணின். இதுவும் உவமைக்குரியதோர் மரபு உணர் த் துதல் துதலிற்று.

(இ-ள்.) உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது என்ற வாறு.”

தடுமாறுதலாவது ஐயமுறுதல், எனவே ஐயநிலையுவமழுங் கண்டு கொள்க.

'கூற்றமோ கண்ணோ பிணைய மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து’’’ (குறள். கoஅடு) என்றும்,

ஈங்கே வருவாள் இவள்யார்கொ லாங்கேயோர்

வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்

1, தடுமாறுவமம் எனப்பாடங்கொண்டார் பேராசிரியர்.

2. தடுமாறு ல்- அ துவே இதுவோ என ஐயுற்றுத் தடுமாறும் கிலையில் உவமை வருதல்.