பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா ங் எ ೯gರ್ಿ

உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல்’’ (கலித். இக)

என்றும் வரும்; பிறவும் அன்ன. (ங் எ)

பேராசிரியம்

இதுவும், உவமத்திற்கேயாவதோர் இலக்கணமுணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்) தடுமாறுவமம்-உவமையும் பொருளும் வேறு நீறி இ இதுபோலும் இதுவென்னாது அவ்விரண்டினையும் உவமையுறச் சொல்லுந் தடுமாறுவமம்; இனி அவ்வாறன்றி உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமை யாக்கியுந் தடுமாறச் சொல்லுதலுந் தடுமாறுவமமெனப்படும்; கடி வரை இன்று- அவ்விரண்டும் உவம மென்று சொல்லற் பாட்டிற் கடியப்படா (எ-று).

'அரிமலர் ஆய்ந்தக ணம்மா கடைசி

திருமுகமுந் திங்களுஞ் செத்துத் தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தனங்காகி யை யத்து னின்ற தரவு’’ (பொய்கையார்)

என்பதனுள், உவமையினையும் பொருளினையும் வேறு வேறு துணி. யாது ஐயுற்று வையத்தும் வானத்துஞ் செல்லாது அரவென்றமையின் இது தடுமாறுவமமாயிற்று.

தளிபெற்று வைகிய தண் சுனை நீல மளிபெற்றார் கண்போன் மலரு-மளிபெற்ற நல்லார் திருமுகத் தோற்றத் தளிபெற்ற கல்லாரம் போன்மலருங் கண்'

என்புழி, நீலத்தோடு கண்ணினையும் கண்ணினோடு நீலத்தினையும் ஒன்றற்கொன்று உவமையாக்கியும் பொருளாக்கியும் ஒருங்கே தடுமாறக் கூறினமையின் இதுவுந் தடுமாறுவம மெனப்பட்டது. பிறவும் அன்ன. (கடு)

தடுமாறு உவமம் - உவமை இது, உவமேயம் இது எனவேறு நிறுத்தி இது போல்வது இது, என்று கூறாது அவ்விரண்டுமே உவம மாகத் தோன்றும்படி கூறப்படும் உவமம்; இனி, உவமையை உவமே யமாக்கியும் உவமேயத்தை உவமையாக்கியும் தடுமாறச் சொல்லும் உவமம் தடுமாறுவமம் எனினும் ஆம்.