பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぶ恋.登. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கடிவரை இன்று - அவ்விரண்டும் உவமம் என்று சொல்லுந்திறத்திற் கடியப்படுதல் (நீக்கப்படுதல்) இல்லை. ஆய்வுரை

இஃது ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்துகின்றது. fஇ-ள்) உவமையும் பொருளும் வேறுவேறு நிறுத்தி இதுபோலும் இதுவென்று கூறாது அவ்விரண்டனுள் உவமையாவது எது உவமேய மாவது எதுஎனக்கற்போர் ஐயுறச்சொல்லுதலும் ,உவமையைப் பொரு ளாக்கிப் பொருளையுவமையாக்கிச் சொல்லுதலும் என இங்ஙனம் தடுமாறிவரும் உவமம் உவமம் என்று சொல்லும் நிலைமைக்கண் தவறென்று விலக்கப்படாது. எ-று:

இங்ங்னம் செய்யுளைக் கற்போர் ஐயுற்றுத் தேர்ந்து துணியும் குறிப்புடன் உவமையமைதலும் செய்யுளின் பொருளாய்வுக்கு அழகு செய்யுகாதலால் தடுமாறுவமம் தவறென்று கடியப்படாதென்றார்.

魔、

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே ¥ޏާ

நிரனிறுத் தமைத்தல் நிரனிறை சுண்ணம் வரன்முறை வந்த மூன்றலங் கடையே." இளம்பூரணம்

என்-னிைன். உவமை பல வந்தவழி வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) அடுக்கிய தோற்றமாவது-உவமைவல அடுக்கித் தோற்றுதல்.”

நிரனிறுத்தமைத்த லாவது-ஒரு பொருளொடு தோற்று

தொடரையுடைத்தாகப் பலவுவமை வருதல்.

திரனிறையாவது-உவமை பலவற்றையுஞ் சேர நிறுத்தி யுவ மிக்கப்படும் பொருளையுஞ் சேர நிறுத்தல்.

1. இதன் முதலடிவினைத் தனிச் சூத்திரமாகவும் இதன் பின்னிரண் உடியினை வேறோர் சூத்திரமாகவும் கொண்டு உரை வரைவர் பேராசிரியர் .

2. அடுக்கிய தோற்றமாவது, வெண் டிங்கள் போன்ற சங்கு போன்ற தாழை என இவ்வாறு ஒன்றற்கு ஒன்று உவமையாகத் தொடர்ந்து அடுக்கிவருதல்: இங்ஙனம் பொதுத்தன்மை வேறுபட்ட நிலையில் உ. வமைகள் அடுக்கி வருங்கால் அவற்றிடையேயுள்ள ஒப்புமை ஒரு கிகர்த் தாய் ஒத்து வாரா மையின் வேறுபட்ட அவ்வுவமைகளால் உவமேயப்பொருளின் இயல்பு உள்ளவாறு: புலப்படாமையின் இங்கனம் அடுக்கிவருதல் குற்றமென விலக் கற்பாலது என

அறிவுறுத்து வார் , அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே என்றார் ஆசிரியர்.