பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா க.அ _ .

சுண்ணமென்பது-உவமையையும் பொருளையுந் துணித்து ஒட்டுதல்.

வரன் முறை வந்த மூன்றலங் கடையே என்பது-அடுக்கிய லுவமை கடியப்படும்; ஆமென்று வரையப்பட்ட நிரனிறுத்தன் முதலிய மூன்றும் அல்லாதவழி என்றவாறு .:

அவற்றுள், கடியப்பட்டது உவமைக் குவமையாக அடுக்கி

வருவது.

  • வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம் வெண்சங்கின்

வண்டிங்கு தாழை வளர்கோடு’’’

என்றவழி அவ்வாறு உவமைக்குவமையாகக் கூறியவதனாற் போதுவ தோர் பயன் இன்மையின் ஆகாதென்று கொள்க.

நிரனிறுத்தமைத்தல் வருமாறு :

  • நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்

அளப் பரி யையே’’ (பதிற்று.கச)

'மதியோலுந் தாமரை போலும்'

என வரும்,

1. கிரல்நிறை சுண்ணம் வரன் முறை வந்த மூன்று’ என்பன முன்னர் ச் சொல்லதிகாரத்திற் கூறப்பட்ட கிர னிறை முதலிய மொழிபுணரியல்புகான் கனுள் உவமைதொடர் தற் கியலாத அடிமறி நீங்கலாக எஞ்சிய கிரல் கிறை சுண் ணம், மொழிமாற்று என்னும் மூன்றுமாகும். மொழிபுணரியல்ப்ாகிய இவை அல்லாதவிடத்து அடுக்கியதோற்றம் விடுத்தல் பண்பு எனவே, நிரல்கிறை முதலிய இவை ஆகுமிடத்துப் பொருள் கோள் வகையில் உவமைகள் அடுக்கிவருதல் குற்றமாகாதென்பதாம்.

‘சுண்ணம் வரை நிலைவைத்த மூன்றலங்கடையே' எனப்படங்கொண்டு

  • சுண்ணத்தினை வரைந்த நிலைமையான் வந்த சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்று மென் னும் மூன்றுமல்லாதவிடத்து உவமையையும் பொருளையும் கிரலேகிறுத்து அமைத்தல் கிரல்கிறை யுவமையாகும் எனப்பொருள்வரைந்தார்

பேராசிரியர்.

2. வெண்டிங்களைப்போன்ற சங்கினைப்போன்ற தாழை என உவமை களை அடுக்கிக கூறினால் வெண் டிங்களை நிறத்தால் ஒத்தது சங்கு: சங்கினை வடிவால் ஒத்தது தாழம்பூ எனவே வெண்டிங்களுக்கும் தாழம்பூவுக்கும் ஒப்புமையின் மையின் அடுக்கி வரலுவமையாய் வழுவாயிற்று.