பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:{2 డౌ? தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நிரனிறை வருமாறு :

"கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி

மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்' (யாப். வி. பக். க.இ.அ.)

என வரும். சுண்ண மாவது :

  • களிறும் கந்தும் போல தளிகடற்

கூம்பும் கலனுந் தோன்றும் தோன் றன் மறந்தோர் துறைகெழு நாட்டே'

(அகத்திணை . கசு. நச்.) என்றவழி நிரனிறையன்றிக் களிறுபோலுங் கலன் எனத் துணிக்க வேண்டியவாறு கண்டுகொள்க. { அ} பேராசிரியம்

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே.

இஃது, எய்தியது மறுத்தது; என்னை? வேறு ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறீஇ அப்பொருளோடு பிறிதொரு பொருளை யுவமித்தலும் உவமையென்று கொள்ளுவானாயினும் அது கொள்ளப்படாது, பொருள் விளங்காமையினெனக் கூறி விலக்கியமையின்.

(இ-ஸ்) அடுக்கிய தோற்றம் -உவமையும் பொருளும் நிறுத்தி அடுக்கிய தோற்றம் ; விடுத்தல் பண்பு-சிறப்பினவாகக் கொள்ளப் பட (எ-ற).

'மதியத் தன்ன வாண்முகம் போலும்

பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை’’

என்றக்கான் மதியத்தன்ன வாண்முகத்தினைத் தாமரை யென் நமையின் அவை ஒன்று ஒன்றனோடு பொருந்தாவென்பது கருத்து.

'இலங்குவளை யன்ன நலங்கே ழாம் பற்

போதி னன்ன தாதவிழ் கைதை’’

என்ற்க்கால், ஒன்று ஒன்றனோடு ஒரு வண்ணத்ததாய் உவமைக் கேற்பினும் ஒன்றற்கொன்று உவமையாய் நின்றது. நின்றுற மற்றும் அதனோடு உவமங் கொள்ளப்படாது, இது வரையறையுடைமையின் விலக் கப்பட்டது. மற்று,