பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா சு கஉடு

“ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந் வோதி யோதி' (பத்துப்-சிறுபாண். 19.23)

என்பது உம் அடுக்கியதோற்ற மெனப்படாதோவெனின், படாதன்றே; யானைக்கைபோ லுங் குறங்கு; குறங்குபோலும் வாழையென அடுக்கிச் சொல்லாது குறங்கினையுடையாளென்று துணித்துக் கூறிய பின்னர்க் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை யென்றானாதலினென்பது தோற்ற'மென்றதனான் உவமையும் பொருளுமாக நிறீஇ உவமவுருபு தோன்றக் கூறுங்கால் அடுக்கப்படுவதென்பது. ( சு)

அடுக்கிய தோற்றமாவது ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமையும் பொருளுமாக உவமவுருபு தோன்றக்கூறி, அப்பொருளைப் பிறிதொரு பொருட்கு உவமையாக்கி இங்ஙனம் உவமையை ஒன்றற்கு ஒன்று உவமானமும் உவமேயமும் ஆகத் தொடர்புபடுத்தி அடுக்கியதனை முடிவில் ஒரு பொருட்கு உவமையாகக் கூறுதல். எடுத்துக்காட்டாக வெண் மதிபோலும் முகம்போலுஞ்செந்தாமரை” என உவமை கூறினால், ஒளிபற்றி மதியம் முகத்திற்கும், மலர்ச்சி பற்றி முகம் தாமரைக்கும் உவமையாதல் பொருந்துமாயினும், இங்ங்னம் அடுக்கிக் கூறியவற்றுள் வெண்மதியும் செந்தாமரையும் ஒன்று ஒன்றனோடு உவமையாதல் பொருந்தாமையின் இங்ங்னம் கூறுதல் உவமைக்குவமையென்னுங்குற்றமாயிற்று.

விடுத்தல் - தவிர்த்தல்.

குறங்கு - தொடை என்னும் உடலுருப்பு. துணித்துக் கூறுதல் - தனித் தனித் தொடராகப் பிரித்து நிறுத்திக் கூறுதல்.

ஆய்வுரை

இதன் முதலடியினை ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடிகளை மற்றொரு சூத்திரமாகவும் பிரித்து உரை வரைந்தார் பேராசிரியர், அவர்கருத்துப்படி ங் அ:அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே' எனத் தனிச் சூத்திரமாகக் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்.

இஃது உவமைக்குவமை கூறுதல் குற்றம் என்கின்றது.

(இ-ள்)அடுககிவரலுவமையினைவிலக்குதல் உவமங்கூறுவோர்க்குரிய இயல்பாகும் எ-று.