பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hසු.ද් தொல்காப்பியம்-பொருளதிகாரம்

அடுக்கிவாலுவமையாவது,ஒருபொருளோடுஒரு பொருளையுவ மவுருபு தோன்ற உவமித்து, அப்பொருளோடு பிறிதொரு பொருளை யுவமித்து இவ்வாறு உவமைகளை உவமையும் பொருளுமாகத் தொடர்ந்தடுக்கி அவையனைத்தையும் ஒரு பொருட்டு உவமையாக முடித்துக் கூறுதல். இங்கனம் உவமையும் பொருளுமாக அடுக்குதல் உவமையும் பொருளும் என்றவகையால் ஒக்குமாயினும் தம் முள் வேறுபாடுடைய இவைஒரு பொருட்கு உவமையாகவரின் அவற்றிடை யேயமைந்த பொதுத்தன்மையாகிய ஒப்புமைக்குணம் தம்முள்மாறு பட்டுப் பொருள் மயக்கமுண்டாமாதலால் அடுக்கிவர லுவமையாகிய அது கொள்ளப்படாது என்றார் தொல்காப்பியனார்.

பேராசிரியம்

ff.G官 நிரனிறுத் தமைத்தல் நிானிறை சுண்ணம்

வரை நிலை வைத்த மூன்றலங் கடையே.

இதுவும் எய்தாதன வரையறையுடைமையிற் கூறியவற்றோடு இனமாகலின் உவமத்திற்காவதொன் றுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நிரனிறுத்து அமைத்தல் நிரனிறை-உவமை யும் நிரலே நிறுத்துப் பொருளினையும் நிரலே நிறுத்து ஒப்புமை கூறின் அது நிரனிறையெனப்படும்; சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங்கடையே - சுண்ணத்தினை வரைந்த நிலைமை யான் வந்த கண்ணமும் அடிமறியும் மொழிமாற்று மென்னும் மூன்றுமல்லாத இடத்து ( ை லு.)

சுண்ணத்தினை வரைந்த நிலைமையான் வந்தனவெனவே சுண்ணந்தவிர மூன்றுளவோவெனின் அதனை ஒருவரை விலக்க மூவரும் வந்திலரென்றாற்போலக் கொள்க, உதாரணம் :

கொடிகுவளை கொட்டைநுசுப்புண்கண் மேனி

மதிபவள முத்த முகம் வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்’’

எனவரும்.

நிரனிறுத்தலென்னாது அமைத்த லென்றதனான் நிரனிறை யன்றி அமைத்துக் கொள்வதும் உண்டு; அது,