பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா எ

ఢ్

யெனக் கூறுதல் வேண்டும். அங்ங்னம் செய்யுட்கு அழகுசெய்வன அனைத்தையும் தொகுத்து அணியெனக் கூறாது அவற்றுள் உவமம் முதலிய சிலவற்றை மட்டும் வரைந்தெடுத்துக் கொண்டு அவற்றைமட்டும் அணியெனக் கூறுதல் பயனில் கூற்றாகும். அணிநூல்களுட் கூறப்படுவனமட்டுமன்றிச்செய்யுட்கு அழகு செய்வனவே றும் உள்ளன. அவற்றை யெல்ல. ம் அணியெனக்கூறுதல் வேண்டும். செய்யுட்கு இன்றியமையாத அவையெல்லாவற்றையும் செய்யுளினின்றும் பிரிக்க வொண்ணாத பொருளுறுப்பென்பதல்லது பிரித்துணர்தற்குரிய அணி. யெனக் கூறுதல் பொருந்தாது. சாத்தனும் அவனால் அணிந்து கொள்ளப்பட்ட முடி தொடி முதலாயினவும் வேறாதல் போலச் செய்யுளுக்குரியவாகச் சொல்லப்படும் அணிகளும் செய்யுளின் வேறாதல் வேண்டும். செய்யுளினின்றும் பிரிக்க வொண்ணாத இயற்கையழகினைப் பிரித்துணரக்கூடிய செயற்கையினைக் குறிக்கும் அணியென்ற பெயராற் கூறுதல் அத்துணைப்பொருத்தமுடையதன்று. இனி, செய்யுட்கு அழகு செய்வனவாக இங்குக் குறிக்கப்பட்ட மகவுநிலை, குறிப்புநிலை முதலாகப்புலவன் மேலும் வகுத்துரைக்கத்தக்க பொருட்படைப்புக்கள் எல்லாம் எஞ்சாமல் தொகுத்து அவற்றை அணி யெனக் கூறாது அவற்றுட் சிலவே கூறியொழியின் அது குன்றக்கூறலென்னுங்குற்றமாய் முடியும் என இவ்வாறு பிற்காலத்தார் கூறிய அணியிலக்கண அமைப்பினைப்பேராசிரியர் மறுத்துரைத்தார்.எனினும், செய்யுட்கு அழகு தருதற்குரிய பொருளுறுப்புக்கள் இன்னவென உணரப்பெறாத நிலைமைக்கண் இடர்ப்பட்டுச் செய்யப்பெற்றன. பிற்கால் அணியிலக்கண நூல்களாதலின் அவையும் ஒருவாற்றால் அமைத்துக் கொள்ளத்தக்கனவேஎனப் பேராசிரியர் அவற்றுக்கு அமைதியும் கூறியுள்ளமை இங்குக்கருதத்தகுவதாகும்.

ஆன்ந்தவுவமை யென்பன சிலகுற்றம் அகத்தியனார் கூறினார் எனக்கூறுபவர், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் ஆளவந்த பிள்ளையாசிரியர் முதலியோரும் ஆவர். அவர்களாற் குற்றமெனப்பட்டவை சங்கப்பாடல்களுள்ளும் பிற சான்றோர் செய்யுட்களுள்ளும் காணப்படுதலால் அவை குற்றமெனப்பட்ா. அன்றியும் அகத்தியனார் தம்மாற் செய்யப்பட்ட முத்தமிழிலக்கணத்துள்ளும் அடங்காதவாறு ஆனந்தவோத்து என்ப்தொரு நூல் செய்தாராயின் அகத்தியமுந் தொல்காபியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் அந்நூல்களின் வேறுபடுதற்கு வழியில்லை. எனவே அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் மாறான்.ஆனந்தவோத்து என்னும் நூல் அகத் தியனாராற் செய்யப்பட்டதன்றென்பதும், அந்நூல்களும் ஆனந்தவுவமை முதலாயின குற்றம் எனப்படாவென்பதும் நன்கு புலனாம்.