பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா க চো"

மற்று அடைசினைமுதல் (தொல். சொல். கிளவி. 26) என்றாற்போல அடையெனவே இந்நாற்பகுதியும் அடங்கக் கூறிப் பண்புத்தொகை யென்புழி வண்ணம் வடிவு முதலாயின அடங்கிய வாறுபோலப் பண்பென்று அடக்குதல் செய்யாது ஈண்டு நான்கெனப் பகுத்ததென்னயெனின், இது பொருளாராய்ச்சியாகலாற் (கட்பு ஆனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் வேறாக நோக்கி வடிவினை யும் உருவினையும் வேறுபடுத்தான்; என்னை? வடிவு பற்றிய ஆண்பினை இரவின்கண் உருவாக உற்றுணரப்படும்; வண்ணமா இன் அவ்வாறு உற்றுணரப்படாதென்பது. அல்லாக்காற் பகற் ஆதிக்க கூறப்படும் வண்ணம் முதலாயினவும் இரவுக்குறிக்கண் எய்துவான் சொல்லும் வடிவும் பண்பும் ஒன்றாகக் கூறினானென்பது. உணர்த்துகின்ற திணைப்பொருளினை எளிதிற் புலப் و فاسع القناة تى إلى படுத்தலுபகாரம் நோக்கியும் அவ்வாறு பகுத்தானென்பது .

1. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்றாயடங்குமாயினும் மெய் (வடிவு) பற்றிய உற்றுணரும் பண்பு இரவின் கண்ணும் உற்றுணரப்படும். கட்புலனாம் பண்பா கிய (உரு) வண்ணம் இரவின் கண் உற்றுணரப்படாது. இதுபொருளாராய்ச்சி பற்றிய அதிகாரமா தலால் கட்புலனாம். பண்பாகிய வண்ணத்தினையும் உற்றுணரும் பண் பாகிய வடிவினையும் ஆசிரியர் வேறாகப்பகுத்துர்ைத்தார். இவ்வாறு பகுத்துரை யாது வடிவும் வண்னமும் ஒன்றாகக் கூறின் பகற்குறிக்கட் கூறப்படும் வண்ணம் முதலாயினவும் பண்பென்னும் பொதுவகையான் இரவுக்குறிக்கண் எய்துவான் செல்லும். அங்ங்ணம் செல்லாமைப்பொருட்டும் உவமத்தால் உணர்த்தக்கருதிய தினைப்பொருளினை எளிதிற்புலப்படுத்தல் உபகாரம் கோக்கியும் மெய் (வடிவு உரு (வண்ணம) என இவ்வாறு பகுத்துரைத்தார் தொல் காப்பியனார்) அடை சினை முதல் (தொல்- சொல்-26) என்றாற்போல. வினை, பயன், மெய், உரு என்னும் இக்காற்பகுதியும் பண் பெனவே அடங்கக் கூறின், பண்பு என்பது குறிப் பின்றி கிகழுங் குணமாகலின் பார் வலொ துக்கமாகிய வினை பண்பெனப்படாது. சமாரியன்ன வண்கை' என வரும் பயனுவமையைப்பண்பென அடக்கின் பண்பாயின் மாரியின் நிறம்போன்று வண் மையும் கரி து எனல் வேண்டும். ஆதலால் அது பண்பென அடங்காது. பாவையியல் கற்றன்ன வொழுக்கினன்' என வடிவுபற்றி உவமங்கொள்ளுங்கால் வடிவுபண்பி (பண்புடையபொருள்) ஆதலின், அது பண் பெனப்படாது. மழைக்காலத்திற் பூத்த பீர்க்கம்பூ சிலவற்றையெடுத்துக்காட்டி இக் நிறத்தளாயினள் தலைவி என்ற வழி, தலைவன் வருவதாக க்குறித்த பருவங்கடந்து விட்டது என்னும் பொருண்மை விளங்குகிறது. இஃது உருவுவமம். இவ்வாறு வினை பயன் மெய்உரு என்னும் நான்கு பகுதியாற் பொருள் புலப்படுத்தும் முறைமை கண்டு உவமப்பகுதி" என்றார் தொல்காப்பியனார். அளவு, சுவை, தன்மை, வெம்மை, நன்மை, தீமை, சிறுமை, பெருமை முதலாயினபற்றியும் உவமம் வரும். அவையெல்லாம் இங்குக் கூறிய வினை பயன் மெய் உரு என்னும் இக்கான்கனுள் அடங்குமெனவும் அவை நான்கும் இத்தகைய பொருட்பகுதியினையுடையன என வும் புலப்படுத்தற் பொருட்டே அவற்றை "வகை பெற வந்த உவமத்தோற்றம் என அ ை- புணர்த்தோ தினார் ஆசிரியர் என்பதாம்