பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைாயியல் - நூற்பா க 45

யன்றி அளவுஞ் சுவையுந் தண்மையும், வெம்மையும் நன்மையுந் தீமையுஞ் சிறுமையும் பெருமையும் முதலாயின பற்றியும் உவமப் பகுதி கூறாரோவெனின், அவையெல்லாம் இந்நான்கனுள் அடங்கு மென்றற்கும் அந்நான்கும் இன்னபொருட்பகுதி உடையவென்றற்கு மன்றே அவற்றை வகைபெற வந்த, என்பானாயிற்றென்பது.

'பறைக்குர லெழிலி' (அகம். 73)

என்றக்காற் பறையும் எழிலியும் ஒத்தல் வினைபற்றி உவமை

கொள்வான் ஒன்றற்குக் குரல் கூறி ஒன்றனை வாளாது கூறினா னாயினும் வினையுவமத்தின் வகையெனப்படும்.

கடைக்கண்ணாற் கொல்வான்போனோக்கி' (கலி. 51) என்பது உம் அதன் வகை”.

வந்த என்றதனான் இல்லாத வினை வருவிததுஞ் சொல்லப் படும். அவை,

‘விசும் புரி வதுபோல்’’ (அகம்.24)

'மணிவாழ் பாவை நடைகற் றன்ன ’’ (நற்.184)

"வான்றோய் வன்ன குடிமையும்” (பாயிரம்)

இவை, உவமையும் பொருளும் ஆகிய வினைபற்றி வந்தில வாகலின் அதன் வகையெனப்பட்டன. அன்ன, ஆங்க என் பன இடைச்சொல்லாகலின் வினைப்பின்னும் வந்தன. "நடை கற்றன்ன' என்புழிக் கற்று என்னும் வினையெச்சந் தன்னெச்ச வினை இகந்த தாயினும் அஃது உவமப்பகுதியாகலான் அங்ங்னம் வருதலும் வகையென்றதனானே கொள்ளப்படும்.

"கொன்றன்ன வின்னா செயினும் ” (குறள்,109)

1, ஒலித்தல் வினை பற்றி' என த்திருத்து க.

2. கோக்கினாற் கொல்வான்போல் கடைக்கண்ண ல் கோக்கினன், என்பார் கடைக் கண்ணாற் கொல்வான் போல் நோக்கி’ என்றமையின் இது வினை.

அவமத்தின் வகையெனப்படும்.

3. விசும்பு உரிதல், மணிவாழ் பாவை நடைகற்றல், வான்தோய்தல் ஆகிய இவை, உவமையும் பொருளும: கி (வேறுகின்று) இல் விர ண்டற்கும் பொதுவாகிய வினை பற்றி வாராமல் இல்லாத வினை வருவித்துரைக்கப்பட்டனவாதலின் வினையு.

வமத்தின் வகையெனப்பட்டன.