பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ા) தொல்காப்பியம்-பொருளதிகாரம்

என்பதும் அது.

'இனரெரி தோய் வன்ன வின்னா செயினும் (குறள்,308)

என்பது வினைப்பெயர்பற்றி உவமஞ் சென்றது.

பொன் மரம் போலக் கொடுக்கு மென்பது பயவுவமத்தின் பகுதியாய் அடங்கும்; என்னை? மழைத்தொழிலாகிய பெயலாற் பயந்த விளையுளுடன் இடையிட்டுப்போய் உவமங்கொள்ளாது கொடைப்பொருள் இரண்டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப் படாது, கொள்வார்க்குப் பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகை யாயிற்று. நிலம்போலுங் கொடை என்பதும் அது.

" தெம்முனை யிடத்துச் சேயர் கொல்'

என்னும் எல்லைப்பொருண்மை மெய்யுவமத்திற்கு வகையெனப் படும், அஃது அன்னவாகலினென்பது இடைக்கிடந்த நிலம் இரண்டினையும் வடிவுபற்றி உவமஞ்செய்தானென்பது. மற்றுச் சேய்மை அண்மை குணமாம் பிறவெனின், அற்றன்று; துடி யிடை என்றவழி அதன் இடைதுணுக்கமுங் குணனாகும்,

1. பொன் மரம் போலக்கொடுக்கும்’ என்பது, அதனால் கொடுக்கப்படும் கொடைப்பொருளுடன் உவம ங்கொண்டு மெய்யுவமமாகாது, கொடுத்தல் வினை 11 ல் கொள் வாக்குவரும் பயன் ஒத் தலால பயனுவமத்தின வகையாயிற்று. 'மழைத் தொழிலாகிய பெயல த்யக்த விளை யுளு - ன் இடையிட்டுப் போய் உவமங் கொள்ள து' ன இவ்வு ையிடையே க. கை ப்படுக்தெ டர், 'மாரியன் எ வண்கை' என்ற தொடர் க்குரிய விளக்கமாகத் தெரிதலால், இங்குத் தொடர்பில்லாத அதனை நீக்கிவிட்டு, 'பொன்மாம்போலக் கொடுக்கு ' என்பது பயவுவமத்தின் பகுதியாய் அடங்கும் என்னை கொடைப்பொருள் இரண்டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப்படாது, கொள் வார்க்குப்பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகையாயிற்று. 'கிலம் போலும கொடை என்பதும் அது' என இயைத் துப் படித்தல் பொருத்த முடை பதாகும். பொன் மரம்-கற்பகம் இக் iர னுலகின் உள்ள ஐக்தருக்களுள் ஒன்றாகிய கற்ப கம், தன்னை ய ை. க்தோர் விரு பிக்கேட்டவற்றையெல்லாம் வரையா து வழங்கும் தெய்வத்தன் மையுடையது என்பது புராணக் கொள்கையாகும்.

2. அஃது அன்ன வாகலின் என்பது 'அஃது அளவாகலின்’ என்றிருத்தல் பொருட் பொருத்தமுடையதாகும். தலைவன் பிரிந்து சென்றுள்ள இடமும் தலைவி தங்கியிருக்கும் மனையும் ஆகிய இரண்டினையும் இவற்றிடையேயுள்ள எல்லையா கிய இடைவெளியையும் உவமை கூறினமையால் இது மெய்யுவமத்திற்கு வகையெனப் படும் ன் ர்

3. துடியிடை என்றவழி மேலும் கீழும் அமைக்த இடப் ரப்பும் அதன் இடைதுணுக்கமும் குணமெனப்படா து வடிவாகவே கொள்ளப்படுதல் போன்று, சேய்மை அண்மையாகிய கிலப்பரப்பும் குணமெனப்படாது வடிவாகவே கொள்ளப் படும் என்பதாம். இனி அன் மையும் சேய்மையும் அளவு என்னும் குணமாதல் ஒப்புமையால் அவை கிறப்பண் பிற்கு இனமென வுங்கொள்ளப்படும்.