பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா க

அவ்வாறு கொள்வார்க்கு என்பது; எனவே நிறப்பண்பு அல்லன. வெல்லாம் மெய்யுவமத்தின் வகையெனப்படுவனவாயின. குணமாத லொப்புமையான் அவை நிறப்பண்பிற்கு இனமெனவும் படும். அவ்வாறு திரிபுடைமையின் அவற்றை விதந்தோதாது வகை யென்றதனாற் கொண்டானென்பது."

  • தளிர்சிவந் தாங்குச் சிவந்தமேனி'

யென்பது உருவுவமத்தின் வகையெனப்படும்; என்னை? உவமத்

தாற் கொள்ளப்பட்ட பொருள் நிறமாயினும் அதனை வினை விரித்தாங்கு விரித்தமையின் அவ்வேறுபாடு நோக்கி வகை

யெனப்பட்டது’. பிறவும் அவ்வாறே கொள்க. இப்பகுதி யுடைமை நோக்கி வகைபெறவந்த என்றானென்பது. (க)

ஆய்வுரை

உவமம் என்பது, கூறக்கருதிய பொருளொடு மற்றொரு பொரு வரினை ஒப்புமை கூறுமுகமாக அப்பொருளினுடைய வண்ணம் வடிவு தொழில் பயன் ஆகிய இயல்புகள் நன்கு புலப்படும்படிச் செய்வதா கிய பொருள் புலப்பாட்டு நெறியாகும், காட்டகத்தே திரியும் "ஆமா என்ற விலங்கினைக் கண்டறியாதனொருவன்,அதனைப்பற்றி யறிந்து கொள்ள விரும்பினானாயின், ஆவினைப்போன்றது ஆமா என அவனுக்குத் தெரிந்த நாட்டிலுள்ள பசுவை உவமையாகக் காட்டி யுணர்த்துதல் மரபு. அவ்வுவமையைக் கேட்டறிந்த அவன்,பின்னொரு நாளிற் காட்டகத்தே சென்று ஆமாவை (காட்டுப் பசுவை) நேரிற் காண்பானாயின், ஆமா என்பது இதுவே என உணர்ந்து கொள் வான். இவ்வாறு பிறிதொன்றினை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக்கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமம்

1. இனி அண்மையும் சேய்மையும் அளவு என்னும் குணமாதல் ஒப்புமையால் அவை கிறப்பண்பிற்கு இன மென வுங் கொள்ளப்படும். அண்மையும் சேய்மையுமாகிய இவை இவ்வாறு ஒருவகையால் வடிவ கவ1 கவும் ஒரு வகையால் பண்பாகவும்திரிபுடைமையால் இவற்றைத் தனித்தெடுத்துக் கூ காது "வகை" எனக் கொண்டார் ஆசிரியர்'

2. தளிர் சிவக் தாங்குச் சிவக்தமேனி' என்பது, கிறம்பற்றிய உவமை பா. யிலும் 'சிவந்தாங்குச்சிவங் த என வினை லிரித்ததுபோல் பொதுத்தன்மையினை விரித்தமையின் அவ்வேறுபாடு கோக்கி உருவுவமம எனப்படாது உருவுவமத்தின் வகையெனப் பட்டது,