பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உ. விரவியும் வருஉம் மரபின என்ப

இளம்பூரணம்

என் - எனின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஒரோவொரு

பொருளான் வருதலின்றி இரண்டும் பலவும் விரவியும் வரும்

மரபினையுடைய என்றவாறு'.

    "உம்மை இறந்தது தழி இயிற்று”.
  • இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று"
                                           (அகம். கடவுள் வாழ்த்து)

என்றவழி வடிவும் நிறனும் விரவிவந்தது. பிறவும் அன்ன. இன்னும் "விரவியும் வரூஉம் மரபின'"என்றதனாற் பலபொருள் விரவிவந்தது

   அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட         
   குடைநிழற் றோன்று நின் செம்மலைக் காணுTஉ’’ (கலித் அச

என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும் புதல்வற்கும் உவமை யாயினும் தோற்றத்திற் இரண்டும் ஒருங்குவந்தமையான் வேறோதப் பட்டது. இன்னும் "விரவியும் வரூஉம் மரபின’’ என்றதனால் 'தேமொழி' எனத் தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும் மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலுங் கொள்க. பிறவும் இந்நிகரனவெல்லாம் இதுவே ஒத்தாகக்கொள்க."

(e–)

1. விரவுதல்-கலத்தல் : அஃதாவது, வினை, பயன், மெய், உரு, என மேற் குறித்த ஒப்புமைப்பகுதிகளுள் இரண்டும் பலவும் கலந்து வருதல்.

2. முற்கூறியவாறு தனித்து ஒன்றாய் வருதலேயன்றி இரண்டும் பலவும் கலந்தும் வரும் என்றபொருளில் வந்தமையால் விரவியும்' என் புழிஉம்மை இறந்தது தழிஇய எச்சவும்மையாகும்,

3. இதுவே ஒத்தாக-இதுவே ஓதப்பட்ட விதியாக.