பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் - நூற்பா ௩

௧௭
 "சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற் றுற்றெனப் 
  பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் 
  கட்டி னினக்கும் இழிசினன் கையது 
  போழ்துரண் டுசியின் விரைந்தன்று மாதோ 
  ஊர்கொள வந்த பொருதனோ 
  டார்புனை தெரியல் நெடுந்தகை போதே’ (புறம்-உ.அ)

என்பது இழிந்ததன்மேல் வந்ததாயின் ஆணியூசியின்து விரிைவு: மற்றுள்ள விரைவின் உயர்ந்ததாகலின் அதுவும் உயர்ந்ததாம். ()

பேராசிரியம் .

இஃது, எய்தாதது எய்துவித்தது.

(இ - ள்.) உவமையெனப்பட்டது உயர்த்த பொருளாகல் வேண்டும் (எ- று).

எனவே, உவமிக்கப்படும் பொருள் இழிந்துவரல் வேண்டு என்பது.

"அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்"(பத்து. பட்டின. 298)

"மாரி யம்பின் மழைத்தோற் சோழர்” (அகம். 335)

"கடல்கண்டன்ன கண்ணகன் பரப்பின் (அகம். 175)

" பொன்மேனி’’

என வரும். இவற்றுள் உவமையுயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பெய்துவித்தவாறு கண்டுகொள்க.

'உள்ளுங்காலை' என்றதனான் முன்னத்தினுணருங் கிளவியான் உவமங்கோடலும், இழிந்தபொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப்படச்செயல்வேண்டுமெனவுங் கொள்க. அவை: 'என்யானை' என் பாவை என்ற வழி அவை போலும் என்னுங் குறிப்புடையான்,பொருள் கூறிற்றிலனாயினும், அவன் குறிப்பினான் அவை வினையுவமை யெனவும்.