பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



௧௮

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

மெய்யுவமை எனவும் படும். இவற்றுக்கு நிலைக்களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லுதும்; அவை பற்றாது சொல்லுதல் குற்றமா கலின்."

    "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
     மாதர்கொல் மாலுமென் னெஞ்சு" (குறள். 1081)

என்பது ஐயற்று முன்னத்தான் உவமஞ் செய்தது. தாமரை யன்று முகமேயெனத் துணிந்தவழியும், மழையன்று வண்டிருந்தலிற் குழலே எனப் பொருட்குக் காரணங்கொடுத்த வழியும், மதியங்கொல்லோ மறுவில்லை என்று உவமைக் குறைபாடு கூறுதலும்,

  "நுதலு முகனுந் தோளுங் கண்ணு
  மியலுஞ் சொல்லு நோக்குபு நினை 
  இயைதேய்ந் தன்று பிறையு மன்று 
  மை தீர்ந் தன்று மதியு மன்று 
  வேயமன் றன்று மலையு மன்று 
  பூவமன் றன்று சுனையு மன்று
  மெல்ல வியலு மயிலு மன்று
  சொல்லத் தளருங் கிளியு மன்று ’’          (கலி: 55)

1. உவமையும் பொருளுமாகிய இவற்றிடையேயமைந்த பொதுத்தன்மையினைக் கருதி ஒப்பிட்டு கோக்குங்கால் உவமிக்கப்படும் பொருளிலும் உவமை சிறந்ததாதல் வேண்டும் என்பார் 'உள்ளுங்காலை' என்றார்.

முன்னம்-குறிப்பு.

முன்னத்தின் உணருங்கிளவியாவது, சொல்லுவான் குறிப்பாற்பொருளும் உரையைப்படுஞ்சொல்

என் யானை, என்பாவை என் புழி யானை எனவும் பாவை எனவும் குறிக்கப்பட்டோர் யானை மேல்வானகிய மைந்தனும் பாவைபோல்வாளாகியமகளும் ஆவர். இங்கு யானை, பாலை என உவமையைக் கூறியதன்றி அதனால் உவமிக்கப்படும் உமமேயமாகிய பொருள் கூறதாதுபோயினும அவர்தம் குறிப்பினால் அவைமுறையே வினை உவமையென செய்யுவமையெனவும் குறிப்பினாற்கருதியுணரப்படும்

உவமைக்கு கிலைக்களங்களாகிய சிறப்பு, கலன், காதல், வலி, கிழக்கிடு பொருள் என்னும் அவற்றுள் ஒன்றை நிலைக்களமாகக்கொள்ளாது வறிதே உவமை கூறுதல் குற்றமாம் என்பார் , அவைற்றாது சொல்லுதல் குற்றமாதலின்' என்றார்