பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௰ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆய்வுரை

        இஃது, உவமமாதற்கோர் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) பொருள் புலப்பாட்டிற்கென எடுத்துக்கூறப்பெறும் உவமை, உள்ளத்தாற் கருதியுணருமிடத்து உவமிக்கப்படும் பொருளாகிய உவமேயத்தினும் உயர்ந்த தன்மையில் மேலதாகும். (எ-று)

(உவமம்) உள்ளுங்காலை உயர்ந்ததன்மேற்றே என இயையும், மேற்றுமேலது 'உவமம்' என்னும் எழுவாய் அதிகாரத்தால் வருவித்துரைக்கப்பட்டது. இங்கு உயர்ச்சியென்றது வினை ,பயன், மெய், உரு, எனச் சொல்லப்பட்ட பொதுத்தன்மைகளால் உவமேயத்தினும் உவமானம் உயர்வுடையதாதலை. இவ்வாறு உவமத்தின் இயல்பினை உள்ளியுரைத்தல் வேண்டும். எனவே உயர்ந்த பொருளுக்கு இழிந்ததனை உவமையாகக் கூறுதல் கூடாதென்பதும், உவமானத்துடன் உவமேயப் பொருள் முழுவதும் ஒத்திருத்தல் வேண்டுமென்ற நியதியின்றி, அதனோடு ஒருபகுதியொத்தலாகிய பொதுத்தன்மை அதன்கண் அமைந்திருத்தல் வேண்டுமென்பதும், உலக வழக்கில் இழிந்ததெனக்கருதப்படும் பொருளை உவமையாக எடுத்துக்காட்ட வேண்டிய செவ்வி நேர்ந்த நிலையிலும் அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக்கொண்டு உயர்ந்த குறிப்புப்பொருந்த உவமஞ்செய்தல் வேண்டுமென்பதும் ஆகிய உவமை பற்றிய விதிமுறைகள் குறிப்பாற் புலப்படுதல் காணலாம்.

   சிறப்பே நலனே காதல் வலியோடு - استی
   அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப.

இளம்பூரணம்

     என்-எனின். இதுவுமது.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்த வற்றோடு உவமிக்கப்பட்டனவேனும், சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்களனாக வரும் என்றவாறு. இவையிற்றைப்பற்றித் தோன்றுமென்பது கருத்து.

 'முரசு முழங்கு தானை மூவரும் கூடி
  அரசவை இருந்த தோற்றம் போலப்

1. நிலைக்களம்-உவமம் கூறுதற்கு அடிப்படையான உணர்வு நிலையாகிய