பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௳ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

என்புழி மகள்கட் காதல் காரணமாக உவமை பிறந்தது. என் யானை என்பதும் அது.

  "அரிமா வன்ன வணங்குடைத் துப்பின் (பத்துப்.பட்டின.298)

என ஒருவன் வலிகாரணமாக உவமம் பிறந்தமையின் அதற்கு நிலைக்களம் அவன் வலியாயிற்று.

இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளின் இழிந்ததெனப் பட்ட பொருள் யாதனும் இயைபில்லதொன்று கூறலாகா தெனவும், உவமையொடு முழுவதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோடொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட்கண்ணும் உளவாகல் வேண்டுமெனவுங் கூறி, அவைதாமும் பிறர் கொடுப்பப் பெறுவனவும், ஒரு பொருட்கண் தோன்றிய நன்மைபற்றியவுங்: காதன் மிகுதியால் உளவாகக்கொண்டு உரைப்பனவுந் தன்றன்மையால் உளவாயின வலிபற்றினவுமென நான்காமென்றவாறு : இவற்றுக்கெல்லாம் வினை, பயன், மெய், உரு என்னும் நான்குந் தலைப்பெய்யுமென்பது.

'சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகார வகையாற் பெறுஞ் சிறப்பு. கலனென்றது அழகு. காதலென்பது அந்நலனும் வலியும் இல்வழியும் உண்டாக்கியுரைப்பது. வலியென்பது தன்றன்மையானே உள்ளதொரு வலியெனக் கொள்க. இவற்றை நிலைக்களமெனவே இவை பற்றாது உவமம் பிறவாதென்பதாம். தன்மேல் வருகின்ற பகைவனைப் போல புலிபோலு மென்று வீரக்குறிப்பு அழியாமற் கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமைக்குத் தோற்றம் ஆண்டில்லை; தன்வினை உவமமாகலின் திரியாதாயினு மென்பது. .

1. பொருளிலும் உவமை உயர்ந்திருத்தல் வேண்டும் என்றதேபற்றி அதனில் தாழ்ந்தபொருளுக்கு யாதேனும் இயைபில்லாத பொருளை உவமை கூறுதல் ஆகா என்பதும், உவமையோடு முழுவதும் ஒத்தல் என்பதின்றி அதனோடு ஒருபுடை ஒக்கும் பொருண்மை உவமேயத்தின் கண் உளவாதல் வேண்டும் என்பது அங்கனம் . உவமை கூறுதற்கு அடிப்படையாகிய பண்பு சிறப்பு கலன் காதல் வலி என கால் வகைப்படும் என்பதும் இவற்றுடன் வினை, பயன், மெய், உரு என்னும் கான்கும் இயைபும் என்பதும் கூறியவாறு.