பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் நூற்பா சு

௨௭

பேராசிரியம்

   இது, மேற்கூறிவருகின்ற உவமை முதல் சினைபற்றி வருங்கால் இன்னவாறாக வென்கின்றது

(இ - ள்.) முதற்பொருளுஞ் சினைப்பொருளும் என்னும் அவ்விரண்டு பொருட்குங் குறித்த வகையான் மரபு படவரின் உரியவை உரியவாம் (எ - று) .

இதன் கருத்து, முதலொடு முதலுஞ், சினையொடு சினையும் முதலொடு சினையுஞ், சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ்செய்தற்கு உரியவெனவும், அங்ங்ணஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படுமெனவுங் கூறியவாறு :

 "வரைபுரையு மழகளிற்றின்மிசை”

என்பது, முதற்கு முதலே வந்து உவமையாயிற்று.

 "தாமரை புரையுங் காமர் சேவடி’’    (குறுந்.கடவுள் வாழ்த்து)

என்பது, சினைக்குச் சினையே வந்து உவமையாயிற்று,

  "நெருப்பி னன்ன சிறுகட் பன்றி. (அகம் 84.)

என்பது, முதல் உவமமாகப் பொருள் சினையாகி வந்தது.

   "அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட 
    குடைநிழற் றோன்று நின் செம்மலைக் காணுரஉ" (கலி, 84)

என்பது, சினையுவமமாக உவமிக்கப்படும் பொருண் முதலாயிற்று

 "துதலிய மர" பென்றதனால்,
 "விசும்பி னன்ன சூழ்ச்சி’’     (புறம்.2)

என்றக்கால், விசும்பென்பது முதலாதல் கருதியுணர்தல் வேண்டும், முதற்சினைப்பகுதி அதற்கு இன்மையினென்பது."

இனி,

1, விசும்பு என்பது அருவப்பொருளாதலின் அதற்கு முதல் சினை என்னும் வடிவகுப்பு இல்லை. எனவே அதனை முதற்பொருளாகவே கருதியுணர்தல் வேண்டும்.