பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 ௨௮

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

    ‘'வேயமன் றன்று மலையு மன்று”           (கலி,55)

என்ற வழியும், மலைநோக்காது மலையுள் வேயெழும் இடங் கருதி அவ்விடமன் றென்றவாறெனக் கொள்க.

  "பூவமன் றன்று சுனையு மன்று’’ (கலி. 55)

என்பதற்கும் ஒக்கும்:

உரிய என்னாது உரியவை என்றதனால், திணையும் பாலும் மயங்கிவரும் உவமையுங் கொள்ளப்படும். அவை,

  "மாரி யானையின் வந்து நின் றனனே’’ (குறுந்.161)

என்பது, திணை மயங்கிற்று.

  "கூவம், குராலான் படுதுய ரிரவிற் கண்ட
  வுயர்திணை யூமன் போலத் 
  துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே’’ (குறுந் 224)

என்பது, உயர்திணைப் பான்மயங்கிற்று.

  "கடம்பமர் நெடுவே ளன்ன மீளி 
   யுடம் பிடித் தடக்கை யோடாவம் பலர்"
                                     (பத்துப். பெரும்பாண் 75) 

என்பது, ஒருமை பன்மை மயங்கிற்று. -

"இலங்கு பிறை யன்ன விலங்குவரல் வையெயிற"

                                          (அகம். கடவுள் வாழ்த்து)

என்பது அஃறிணைப் பால் மயங்கிற்று, பிறவுமன்ன,

இக்கருத்து அறியார் இவற்றையுஞ்

  "செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு "
                                             (தொல். சொல். கிளவி.16)