பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் - நூற்பா சு

௨௪

என்புழி இலேசுகொண்டு உரைப்ப*. '

ஆய்வுரை

  இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது.

(இ-ள்) முதல் எனவும் சினை எனவும் கூறப்படும் இருவகை பொருள்களுக்கும் கருதிய மரபினால் அவற்றிற்கு உவமையாய் வருதற்கு உரியவை உரியனவாம். (எ-று)

எனவே, 'மலைபோலும் யானை’ என முதலொடு முதலும் “தாமரைமலர் போலும் சேவடி" எனச்சினையொடு சினையும் "தாமரையிலையின்கீழுள்ள மலர் போன்று குடைநிழற்கீழ்த்தோன்றும் குழவி" என முதலொடு சினையும், நெருப்பினையொத்த சிறிய கண்ணினையுடைய பன்றி எனச் சினையொடுசினையும் உவமஞ்செய்தற்குரியன என்பதும் அவ்வாறு உவமங்கூறுங்கால் மரபுபிறஎழாமற் கூறப்படும் என்பதும் பெறப்படும்.
    சுட்டிக் கூறா உவம மாயின்
    பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே

இளம்பூரணம்

என்-எனின். இதுவுமோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) சுட்டிக் கூறா உவமை என்பது-உவமிக்கப்படும்

பொருட்கு உவமை இதுவெனச் சுட்டிக்கூறாமை. அவ்வாறு வருமா வருமாயின் உவமச்சொல்லொடு பொருந்த உவமிக்கப்படும் பொருளொடு புணர்த்து உவமவாய்பாடு கொள்க என்றவாறு.

1. இலேசுகொண்டுரைப்ப' என்றது, சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையைக் குறித்தது போலும்.

'செப்புமிடத்தும் வினாவுமிடத்தும் சினைக் கிளவிக்கும் முதற் கிளவிக்கும் முதலொடு முதலே பொரூஉக. சினையொடு சினையே பொரூஉக' எனவும், "அப்பொருளாகும் என்றானாதலின் அவ்வச்சினைக்கு அவ்வச்சினையே பொரூஉக" என்றது. இது முதற்கும் ஒக்கும் என உரை வரைந்த இளம்பூரணர், இச்சூத்திரத்தில், சினையை முற்கூறிய முறையன்றிக் கூற்றினால் 'முதலுஞ் சினையும் உறழ்ந்து வருவனவும் உள, குணமருங்குபற்றி' என இலேசினாற்கொண்டார். முதலும் சினையும் ஆகியவற்றுள் மரபினான் உவமையாதற்கு உரியவையுள்' என இவ்வுவ உமவியற் குத்திரத்தில் ஆசிரியர் எடுத்தே துதலால் இவ்விதியை இலேசினாற் கொள்ள வேண்டிய இன்றியமையாமையில்லையென்பது பேராசிரியர் கருத்தாகும். 'எடுத்தோதது.இவ்வழியே உயத்துணர்வதாதலின்' என வரும் உரைத்தொடர் இங்கு கினைத் தற்குரியதாகும்.