பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௩௨

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அ. உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்.

இளம்பூரணம்

என்-எனின். இஃது உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

(இ. ள்) இரட்டைக் கிளவியாயினும், நிரனிறுத்தமைத்த நிரனி நைச்சுண்ணமாய் வரினும், மிக்குங்குறைந்தும் வருதலன்றியுவமை யடையடுத்துவரினும், தொழிற்பட்டு வரினும், ஒன்றும் பலவுமாகி வரினும், வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டும் என்றவாறு.

அவ்வழி வாராது மிக்குங்குறைந்தும் வருவது குற்றம் என்ற வாறாம்

பேராசிரியம்

    இதுவும் அது.

(இ-ள்) உவமானமும் பொருளுந் தம்மின் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் (எ-று).

   "மயிற்றோகைபோலுங் கூந்தல்"

என்பதன்றிக்,

    "காக்கைச் சிறகன்ன கருமயிர்"

என்று சொல்லின், அஃதொத்ததெனப் படாதென்றவாறு.

   "புலிபோலப் பாய்ந்தான்"

என்பதன்றிப் பிழையாமற் பாயும் என்பதேபற்றிப்

    "பூசைபோலப் பாய்ந்தான்’’

எனின், அதுவும் ஒப்பென்று கொள்ளாது உலகமென்றவாறு. ஈண்டு ஒத்தவென்பதனை,

l கிரனிறையாய் வரினும், கண்ணமாய் வரினும், அடையடுத்துவரினும், தொழிற்பட்டு

. உவமையும் பொருளும் இரட்டைக் கிளவியாய் வரினும், நிரனிறுத்தமைத்த வரினும், ஒன்றும்பலவுமாகி வரினும் நிலைமொழிக்கேற்ப வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டுமெனவும், அங்ங்ணம் வாராது நிலைமொழியும் வருமொழியும் மிக்குங்குறைந்தும் வருவது குற்றம் எனவும் இச்சூத்திரப்பொருளை நிலைமொழி வருமொழி என்னுக் தொடரமைப்பில் வைத்து விளக்குவர் இளம்பூரணர்.