பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:?, ? தொல்காப்பியம்-பொருளதிகாரம்

குங்கால் மயக்கந்திர ச் சிறப்பித்தல் வேண்டும். அஃது உலகினுள் உயர்ந்ததென்று ஒப்ப முடித்த பொருளினையுஞ் சிறப்பித்தற்கு உவமஞ் செய்யவோ வெனிற், செய்யாரென்பது, என்னை? முகமொக் குந் தாமரை என்றால் முகத்திற்குந் தாமரைக்குஞ் சிறப்புடைமை மயங்கி வாராது, பின்னும் முகத்திற்கே சிறப்பா மென்பது கருத்து. அஃதெனப்பட்டது பொருளாகலான் 'உயர்ந்ததன் மேற்று' (உ.எ.அ) என்னும் விதி அப்பொருட்கு எய்துவிக்க. (க)

இஃது உவமைக்கண் வருவதோர் வேறுபாடுணர்த்துகின்றது.

(இ-ள்) உவமேயமாகியபொருளினை உவமையாக்கி உவமானத்தை உவமேயமாக்கிமயங்கக் கூறுமிடத்தும் அவ்வுவமேயப் பொருள் குற்ற மற்ற சிறப்பின் உவமம் போல உயர்ந்ததாக்கிக் கூறப்படும் (எ-று)

"பொருள்” என்றது உவமேயத்தினை. அஃது என்றதும் அது. இச் சூத்திரவிதிப்படி தாமரை முகம்” எனற்பாலதனை 'முகத்தாமரை” எனமாற்றி உவமை கூறுமிடத்துவரும் உவம வேறுபாட்டினைப் பிற்கால அணியிலக்கண நூலார் உருவகம்’ எனப் பிறிதோரணியாகக் கொள்வர்.எனினும் இங்ங்னம் வருவதனை உருவகம் என வேறோரணியாக்காது உவமையின் வகையாகக், கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்தென்பது இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் பேராசிரியர் தரும் உரைவிளக்கங்களாற்புலனாம்.

āp பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற்றிராக்

குறிப்பின் வருஉ நெறிப்பா டு டை 1.

இளம்பூரணம்

என்-எனின்.இதுவும் உவமைக் குரியதோர் மரபுணர்த்துதல் -- # குtதலற்று.

(இ - ள்) உவமையும் பொருளும் ஒத்தன கூறலேயன்றிப் பெருகக் கூறலுஞ் சிறுகக்கூறலும் மேற்சொல்லப்பட்ட சிறப்

1. 'அஃது என்பது. அஃதேல் என்றிருத்தல் பொருத்தமாகும்.

"ஒப்பமுடிதல்' ஆவது, உலகிற்பெரும்பாலே ரால் உடன் பட்டு ஏற்றுக்

கோள்ளப்படுதல்.