பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா கக تم تكنع

அன்னபிறவாற் கொள்ளப்படுவன : நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர என்றித் தொடக்கத்தன கொள்க.

பல்குறிப்பின என்றதனான் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மைய வாய் வருவனவும் வினையெச்ச நீர்மையவாய் வருவனவும் முற்று நீர்மையவாய் வருவனவும் இடைச்சொல் நீர்மையவாய் வருவனவும் எனக் கொள்க. புலிபோன்ற சாத்தன் புலிபோலுஞ் சாத்தன்' என்பன பெயரெச்சம். புலிபோன்று வந்தான் புலிபோலப் பாய்ந் தான்’ என்பன வினையெச்சம். புலிபோலும் புலிபோன்றனன் என்பன முற்று. அன்ன, இன்ன இடைச்சொல்.

இன்னும் பல்குறிப்பின என்றதனான் விரிந்தும் தொக்கும் வருவனவுங்கொள்க. தேன் போல இனிய மொழி இது விரிந்தது. ' தேன்போலும் மொழி இது உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தெt க்கு நின்றது. 'தேமொழி’ என்பது எல்லாந் தொக்கது. ே பிறவு மன்ன.

ஈண்டு எடுத்தோதப்பட்ட முப்பத்தாறினும் ஒன்ற, என்ற,

மாற்ற, பொற்ப, நாட, நடுங்க என்பனவொழித்து நின்ற முப்பதும் அன்ன பிறவாற் கொள்ளப்பட்டவற்றுள் நோக்க என்பதும் நேர என்பதுஞ் சிறப்புவிதி யுடைத்தாதலின் அதற்கு உதாரணம் ஆண்டுக் காட்டுதும். ஏனைய ஈண்டுக் காட்டுதும்.

"வேலொன்று கண்”

'கயலென்ற கண்”

‘மணிநிற மாற்றிய மாமேனி!

மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்’

"வேயொடு நாடிய தோள்’

'படங்கெழு நாகம் நடுங்கு மல்குல

1. தேன் போல இனியமொழி என் புழிப் போல லென் லும் - ச் சொல்லும் இனிமை' என்னும் பொதுத்தன்மையும் விரிந்து கின்றன. 2. தேன் போ லும் மொழி: எ ன் புழிப்போலும் என்னும் உவமச்செ ல் விரிக் தும் இனிமையாகிய ஒப்புமை தொக்கும் கின்றன. 8. தேமொழி என்புழி உவமச் சொல்லும் பொதுச்

தன் மையும் ஒருங்கே தொக்கன.