பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் مباني يلي

"குன்றி னனையாருங் குன்றுவர்' (குறள். கசுடு} "இறந்தாரை யெண்ணிக்கொண் டற்று” (குறள் உ.உ

'மருப்பிற் றிரிந்து மறிந்து வீழ் தாடி’ (கலித்.கடு) "துணைமல ரெழினிலத் தேந்தெழின் மலருண்கண்' (கலித். கச) 'முத்தேர் முறுவலாய்” (கலித். கங்) 'எச்சிற் கிமையாது பார்த்திருக்கு மச்சீர்' (நாலடி. க. சடு) “யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (அகம். கடவுள் வாழ்த்து) ‘கிளைசெத்து மொய்த்த தும்பி’ (நற். கூடு)

என வரும். பிறவுமன்ன.

பேராசிரியம்

இஃது, உவமத்தினையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடைவருஞ் சொல் இனைத்தென்கின்றது. அவைதா மென்பது, வினை பயன் மெய் யுரு வென்னு நான்குவமையு மென்றவாறு.

(இ -ள்.) இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையே போல்வன பிறவும் வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் (எ - று).

ஆறாறவையு மென்பது அவை முப்பத்தாறு மென்றவாறு பல்குறிப்பின வென்பது, அவை இடைச் சொல்லாகித் தொக்கு வருவனவுந் தொகாதே நிற்பனவும் வினைச் சொல்லாகி வேறுபட நிற்பனவு மெனப் பலவா மென்றவாறு.

இவ்வோதிய வாய்பாடெல்லாம் நான்கு உவமத்திற்கும் பொது வென்பது ஈண்டுக் கூறி, இனி அவை சிறப்புவகையான் உரியவாறிது வென்பது மேற் கூறுகின்றான்.

பிறவும்' என்பதனான் எடுத்தோதினவேயன்றி, நேர நோக்க துணைப்ப மலைய ஆர அமர அனைய ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழுவ என்றற்றொடக்கத்தன பலவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென் எச்சங்கள் பற்றி வருவனவும் பிறவுமெல்லாங் கொள்க. ஈண்டு எடுத்தோதியவற்றுள் வரையறை

1. ஒப்பித்தல் - ஒப்புமை கூறி விளக்குதல்,

இனைத்து - இத்தொகையினது, இங்கு எண்ணப்பட்டவுவமவுருபுகள் இடைச் சொல்லாய் மறைந்தும் விரிந்தும் வருதலும் வினைச் சொல்லாய்ப் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் முற்றாக வும் வேறுபட கிற்றலுமாகிய பலவேறு குறிப்புக்களை புடையன என் பார் கூறுங் காலைப் பல்குறிப்பின' என்றார்.