பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:బ్రొ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஒழிந்தனவும் இவ்வாறே நான்கு பகுதியும் பற்றி வருமாறு கண்டுகொள்க.

'வாயென்ற பவளம்’ என்றது பண்புவமைபற்றி வந்தது.

இது "வாயாகிய பவளம்' என்று ஆக்கச் சொல்லானும் வரும்.

    • மணிநிற ബ 28¤ಕ್' -

என்பது உருவுவமம்.

'மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்’

என்பது மெய்யுவமம்.

வேயொடு நாடிய தோள்'

என்பது நாடவென்பது வந்த மெய்யுவமம்.

படங்கெழு நாக நடுங்கு மல்குல்'

என்புழி, நடுங்கவென்பது மெய்யுவமம்பற்றி வந்தவாறு. இவ் வோதிய வாய்பாட்டோடு பொருந்த வருஞ் சொல்லெல்லாம் பல் குறிப்பின வென்பனாதற் கொள்ளப்படும். இப்பகுதி யெல்லாம் புறனடையாற் கொள்வனவற்றிற்கும் ஒக்கும். இச் சொற் பரப் பெல்லாம் நோக்கி,

"உவமச் சொல்லே வரம்பிகந் தனவே’’

என்று ஓதி உரைப்ப; அவை அவ்வச்சொல்லுள் அடங்கு மாற்றான் வரம்பிகந்தனவாகா வென்பது."

AASAASAASAAAS

1. உவமச்சொல்லே வரம்பிகந்தனவே' என வரும் இந்நூற்பா, எங்த நூலுக் குரியதெனத் தெரியவில்லை. தொல்காப்பியனார் அன்னமுதல் புரைய் என்பதீறாகச் சொல்லிய முப்பத்தாறுருபுகளும் பிறவும் என்பதனால் அச் சூத்திர வுரையுள் எடுத்துக்காட்டப்பட்ட கே என்பது முதல் கெழுவ என்பதீறாகவுள்ள வுருபுகளும் அவை போல் அருகிவருவன சிலவுமாக உவமவுருபுகளை ஒருவரம்பிற்பகுத்து அவற்றை கால் வகையுவமங்கட் குப் பொதுமையின் உரியனவாகவும் ஒவ்வொரு வகைக்குச் சிறப்பாக வுரியன வ: கவும் வருமெனவும், இடைச்சொல்லாகவும் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று எனப் பல்வேறு குறிப்பினவாகவும் வரும் உவம வுருபுகள் யாவும், மேற் குறித்த உருபுகளுள் அடங்கும் எனவும் கொள்ளுமாறு ஆசிரியர் தொல்காப்பிய னார் உவமவுருபுகளை இவ்வியலில் வரையறுத்துக்க துகின்றாராதலின், பிறர்கூறு மாறு போல உவமச்சொல் வரம் பிறந்தன ஆகா என்பது பேராசிரியர் கருத்தாகும்.