பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா கக ੱਥੇ

இனிப் பிறவு மென்றதனான் ஒதப்பட்டன வருமாறு:

  • துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று’’ (குறள்.22)

என்பதனுள், துணைப்பவென்பது உம் அற்றென்பது உம் வந்தன.

  • குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ

குன்றி யனைய செயின்' (குறள். 965)

என்று அனையவென்பது வந்தது. பிறவுமன்ன

'கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந்.:)

என, இன் வேற்றுமையும் உவமவுருபோடு வந்தது.

  • குளித்துப் பொருகயலிற் கண்பனி மல்க’ (அகம்313)

என்பது, உவமவுருபின்றி இன்னுருபு தன்பொருட்கண்ணும் வந்தது.*

துரதுணம் புறவெனத் துதைந்த நின் னெழினலம்’ (கலி.56)

என்பது எனவெனெச்சத்தால் உவமம் வந்தது, பிறவுமன்ன.

இவை எல்லாம் வரைவின்றி நான்குவமமும்பற்றி வருமாறு கண்டுகொள்க. ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வந்த உவமங்

1. கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுங். 9 ) என்புழி இன் வேற்று மையாகிய ஐந்தாம் வேற்றுமை (தன்னுருபுமறைய 'இன்' வந்தது எனவும் களித் துப் பொருகியலிற் கண்பனிமல்க (அகம் 313) என் புழி, உவமவுருபின்றி இன்னுருபு இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் எனத்”) தன் பொருட்கண் வந்தது எனவும் பேராசிரியர் கூறும் வேறுபாடு மேலும் சிந்தித்துணரத்தகுவதாகும்.

2. வரைவு இன்றி - வினை பயன் மெய் உரு என்பவற்றுள் இன்ன வகைக்கு உரியது என்னும் வரையறையின்றி.

‘ஐம்தாம்லேற்றுமைப்பொருள் வந்த உவமங்களும் உவமவுருபு தொகைப் படாமையின் உவமத்தொகையெனப்படா என இயையும். .