பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா க.அ 夺、

வருமென்பது அறிந்தாமன்றே, இ வ் வ து சூத்திரஞ் செய்தலானென்பது." (άς)

ஆய்வுரை

இது மேற்கூறியவாறு நால்வகையுவமங்கள் பற்றி உருபுகளை வகைப்படுத்தற்குரிய காரணம் கூறுகின்றது.

(இ-ஸ்) மேற்பகுத்துக்கூறியவாறு வினை, பயன், மெய், உரு என்பவற்றுக்குரியவாம் பொருள்கள் தொன்றுதொட்டு மரபாக வழங்கி வரும் அவ்வுருபுகளில் புலப்பட்டுத் தோன்றும். (எ-று.)

நால்வகை யுவமைகளுள் இன்னவுவமைக்கு இன்னின்ன வுருபுகள் சிறப்புரிமையுடையன எனத் தொல்காப்பியனார் நியமித்துரைத்தற்கு அவர் காலத்தில் மேற்குறித்தவுருபுகள் தத்தம் வரலாற்று நெறியால் வினை, பயன், மெய், உரு எனவரும் நால்வகையுவமைகளுள் ஒன்றற்குச் சிறந்துரியனவாகப் பயின்று வழங்கினமையே காரண மென்பதும், இவ்வாறு மரபுபற்றி வழங்கும் இவ்வுவமவுருபுகளின் இடமாகவே, வினை பயன் மெய் உரு என்னும் உவமவகைபற்றிய பொருட்பாகுபாடு கூர்ந்துணருங்காற் புலப்பட்டுத் தோன்றும் என்பதும் இச்சூத்திரத்தாற் புலனாம்.

'நாலிரண்டாகும் பாலுமா ருண்டே |جائے 5:

1. உ. ருவுவமவுருபாகிய போலும் என்பது, இடைச் சொல்லாய் வினைச் சொல்லாகப் பயின் று வழங்குதலான் அதற்குரிய பொருட்காரணம் கூறு தற்கியல வில்லை. ஆயினும் இஃது அன்ன வென்பதுபோல மற்றை மூன்றுவமத்தும் பயின் து வரும் என்பது எய்துவித் தற்கு இதனை உருவுமத்திற்குரியவுருபுகளுள் முதற்கண் வைத்து எண்ணினார் தொல்காப்பியனார். மறுப்ப, ஒப்ப முதலாயின வற்றை உருவி மத்திற்குப் பெருவரவினவாக ஆசிரியர் உரி ைoப்படுத்துக் கூறுதலால், அங்க ைல் உரியனவாதற்கு இவையும் ஒரு காரணமுடையதாதல் வேண்டும். அன்றியும். இவை மரபிற்றோன்றும் என்றதனால் இவற்றை மரபுபற்றி அறிதல் வேண்டும். இவ்வாறு குத்திர ஞ்செய்கலான் தலைச் சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தா மன்றே என இபையும். ஆசிரியர் இவ்வாறு சூத்திர ஞ் செய்தமையால் தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் இவ்வு ருபுகள் இவ்வாறு பயின்றுவரும் என்பது அறிந்தோமல்லவா ? என்பது இத்தொடரின் பொருளாகும். - -

2. இந்து ற்ப இதேயமைப்பில் மெய்ப்பாட்டியலில் இரண்டாஞ் சூத்திரமாக

வந்துள்ளமை நினைக்கத்தகுவதாகும்.