பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ、零 தொல்காப்பியம்- பொருளதிகாரம்

படுமென்றவாறு. எனவே, உலகத்து வழக்கினும் அடிப் படத் தோன்றும் உவமையாயிற்றாயினும் உவமப்பொருள் புலப்பாடு செய்யாது, 'புறமதி போலு முகம்’

என்றதுபோல வென்பது இதன் கருத்து.'

ஆய்வுரை

இஃது, உவமப்பொருளான் உற்றதுணருமாறு உணர்த்து கின்றது.

(இ.ஸ்) உவமையாகிய பொருளைக்கொண்டு உவமேயமாகிய பொருளுக்குப் பொருந்தியன இவையென ஆராய்ந்துணருமிடத்து நெடுங்காலமாக அடிப்பட்டு வழங்கிய உலக வழக்கினையொட்டியே

அவை அறியப்படுவனவாம். எ-று

'கனவுடம் படுநரிற்கவிழ்ந்துநிலங்கிளையா’ என உவமை கூறியவழி, களவுடம் படுநர்க்குள்ளவேறுபாடு உலகத்து நெடுங்கால மாகப் பயின்று வரும் வழக்காதலால் அவ்வுவமையேதுவாகக் கையொடுபட்ட கள்வரைப் போல நின்றாள்' என உவமேயப் பொருளில் எள்ளுதற்பொருள் தோன்றி நகைபுலப்படுவதாயிற்று' எனப் பேராசிரியர் தரும் விளக்கம் இச்சூத்திரப்பொருளைத் தெளிவுபடுத்துதல் காணலாம்.

இனி, உவமப்பொருளையுணர்தல்’ என்பதற்கு, உவமப் பொருளாலே சொல்லுவான் உள்ளத்துக்குறிக்கப்பட்ட உவமேயப் பொருளையுணர்தல்' எனப் பொருள்கொண்டு கயல், சிலை, கார் எனவரும் உவமப்பொருள்களாலே முறையே அவற்றுக்கு உவமேய மாகிய கண், புருவம், கூந்தல் என்பவற்றைக் குறிப்பினால் தெளிந்துணர்தல் என்பது உலகவழக்கில் நெடுங்காலம் பழகிவழங்கும் மரபினாலேயே பொருந்திவரும் எனவும், அங்ங்னம் மருவி வழங்காதன கயல், சிலை என்றாற்போல வெறும் உவம அளவில் நின்று உவமேயப் பொருளைப் புலப்படுத்தும் ஆற்றலுடையன அல்ல எனவும் இச்சூத் திரப் பொருளை விளக்குவர் இளம்பூரணர்.

1. எனவே, உலகத்து வழக்கினுள் அடிப்படத்தோன்றும் உவமையாயிற்றா யி லும் புறமதிபோலு முகம்’ என்றதுபோல உவமப்பொருள் புலப்பாடுசெய்யா து என்பது இதன் கருத்து' என இவ்வுரைத்தொடரை இயைத் துப் பொருள் காண்க.

மதி உலக வழக்கினுள் தொன்று தொட்டு வழங்கும் . வமையாயினும் மறு வற்றது என்பதனை ப் புலப்படுத்தும் நிலையில் மதியின் புறத்தை புவமையாகச் சொல்லும் மரபு இல்லையாதலால் புறமதிபோ லும் முகம் என்றது 'கதை தீர்ந்த முகம்:

எ னப்பெ ருள் புலப்பாடு செய்யாது என்பதாம்.