பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா உங் அகி

பிறப்பொடு நோக்கிற்று. அவ்விடத்திற்கேற்பக் கூறுதலின் முன்ன மாயிற்று. அம்மதியினது தோற்றம் இத்தன்மைத்தெனத் துணிதலின் அதன் கண் உவமைச்சொல் வந்தது.

"வள்ளிதழ் கூம்பிய மணிமரு விருங்ருழிப்

பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப’ (கலித். கஉச)

என்பதும் அது. (உங்)

பேராசிரியம்

இது, மேலெல்லாம் ஏனையுவமங் கூறி உள்ளுறையுவமம் உணர்த்துதல் நுதலிற்று. மேல் இசைதிரிந்திசைக்கு (195) மெனப்பட்டவற்றின் பகுதியாயினும் இதனை ஆண்டுக் (196) கூறாது ஈண்டுக் கூறினான் உள்ளுறையுவமமாகலானும் இவ் வோத்து உவமவியலாகலானுமென்பது."

(இ - ள்.) பிறிதொடு படாது-உவமையொடு உவமிக்கப் படும் பொருள் பிறிதொன்று தாராது; பிறப்பொடு நோக்கிஉவமநிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கி;

1. "கிலவுக் காண்பதுபோல அணிமதியேர்தர” (கலித். 119) என்புழி மதியின் எழுச்சியைக் காணுதற்குப் பிறபொருளை உவமை கூறாது மதியின் தோற்றமாகிய பிறப்பினை நோக்கி அப்பிறப்பிடத்திற்கேற்ப அம்மதியினது எழுச்சி இவ்வாறிருந்தது எனத் துணியும் நிலையில் நிலவுக்கா ண்பது போல’ என அதன் கண் உவமச்சொல்

வந்தமைகாண்க.

இது முதல் 81 முடியவுள்ள குத்திரங்கள் உள்ளுறையுவமம் பற்றியன என்பது

பேராசிரியர் உரையினால் நன்குபுலன. ார்.

2. இச்சூத்திரத்தாற் கூறப்படும் உள்ளுறையுவமம், மேற்பொருளியலில் இசைதிரிந்திசைப்பினும் பொருள் இயையும்’ (தொல்-பொருளியல்-க) எனச் சொல்லுனர்த்தும் பொருளும் சொற்றொடர் உணர்த்தும் பொருளும் ஆகிய பகுதிக் கண் அடங்குமாயினும், இதனை அவ்வியலிற்கூறாது உவமமா தல் பற்றி இவ்வுவ மலியவிற் கூறினார் தொல்காப்பியனார் என்பதாம்.