பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P/% - தொல்காப்பியம்-பொருளதிகாரம்ے

முன்னை மரபிற் கூறுங்காலை, - கருத்தினான் இதற்கு இஃது உவமையென்று சொன்ன மரபினாற் கூறுங்காலை; துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே-இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்பது துணிந்து கொள்ளத்தோன்றும், அவ்வாறு துணிந்துகொள்ளும் உணர்வுடையோர் கொள்ளின் (எ - று).

எனவே, அஃது எல்லார்க்கும் புலனன்று நல்லுணர் வுடையோர்க்கே புலனென்பது உம் அவர் கொள்ளச் செய்ய வேண்டுமென்பது உங் கூறியவாறு. இதனானே செய்யுளுட் பயின்று வருமென்பது கூறினானாம். அவற்றிற்கு உதாரணம் மேற்காட்டுதும். மற்றிதனை உவமையென்ற தென்னை? உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக நிறீஇக் கூறானாயினெனின் அங்ங்னங் கூறானாயினும் உவமம்போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதனை உவமையென்றான். அஃது ஒப்பினாகிய பெயரென்பது;

1. முன்ன மரபிற் கூறுங்க. லை' என்பதே பேராசிரியர் கொண்டபாடம் என்பது, கருத்தினான் இதற்கு இஃது உவமையென்று சொன்னமரபினர் ற் கறுங்கா லை: என வரும் அவரது உரைப்பகுதி பாற் புலனாம். முன்னம்-கருத் து .

பிறிதோடுபடாது - உவமையினை (உவமேயமாகிய) பிறிதொருபொரு ளோடு பொருத்திக் கூறாது.

பிறப்பொடு கோக்குதலாவது உவம கிலங்களுட் பிறக்த பிறவிகளோடு சார்த்தி கோக்குதல்,

முன்னம பாவது, கருத்தினால் இதற்கு இஃது உவமையென்று சொன்ன ມມີ : 1.

துணிவொடு வருதலாவது, வெளிப்படக்கூறிய இது, வெளிப்படக கூறப் பட த இன் ைபொருட்கு உவமமாகும் எனக் கற்போர் துணிந்து கொள்ளுமாறு தோன்றுதல்,

துணிவினோர் என்றது, அங்கனக் துணிந்துணர வல்ல துண்ணுணர்வுட்ை யோ ரை.

"துணிவினோர் கொளின் துணிவொடுவரூஉம் என இயையும்.

2. 'உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாககிறீ இக் கூறானாயின் மற்றி தனை உவமையென்றது என்னையெனின் , அங்ங்னங் கூறானாயினும் உவமம் போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதனை புவமையென்றான்' என இவ்வுரைத்

தொடரை வினாவும் விடையுமாக இயைத்துப்பொருள் காண்க.