பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உச அf.

என்னை? இவற்றை உவமப்போலி யென்று கூறுமாகலின். (உங்) ஆய்வுரை

இஃது, உள்ளுறையுவமத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள்) வெளிப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன், அதனை உவமையாகக் கொண்ட உவமேயப்பொருள் இதுவென வேறு நிறுத்திக்கூறாது, உவமநிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக்கருத்தினால் இது இன்னதற்கு உவமையென்று உணர்ந்து கொள்ளவைத்த புலனெறி மரபினால் உவமங் கூறுங்கால் நல்லுணர் வுடையோர் கூர்ந்துணரின் இன்னபொருட்கு இஃது உவமமாயிற் றென்று துணிந்து கொள்ளவருவது மேற்குறித்த உள்ளுறை யுவமம் எ-று.

பிறிதொடுபடாமையாவது, உவமத்தின் வேறாக உமமேயப் பொருள் இதுவென வெளிப்பட நிறுத்தாது உவமப்பொருளை மட்டும் கூறுதல். பிறப்பொடு நோக்கி முன்னமரபிற் கூறுதலாவது. உவமநிலங்களுட் பிறந்த கருப்பொருள் நிகழ்ச்சியோடு சார்த்திநோக்கி இதற்கு இது உவமையென்று உவமேயப்பொருளைக் குறிப்பினால் உய்த்துணர்ந்து துணிந்து கொள்ளும்படி கூறுதல். இங்ங்னம் கருப் பொருள் நிகழ்ச்சியைக் கூர்ந்துநோக்கிக் குறிப்பினால் இது இதற்கு உவமையாகும் என உள்ளுறைப் பொருளை உய்த்துணர்ந்து தெளி யும் நல்லுணர்வுடையார்க்கே இவ்வுள்ளுறையுவமையின் அமைப்பு இனிது புலனாம் என்பார், துணிவினோர் கொளின் துணிவோடு வரூஉம் என்றார். எனவே இது நல்லுணர்வுடையார்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகாதென்பதும், நல்லுணர்வுடையோர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இவ்வுள்ளுறையுவமம் அமைதல் வேண்டும் என்பதும், இதனால் இவ்வுவமம் செய்யுளுட்பயின்று வரும் என்பதும் கூறினாறாயிற்று. உவமையும் உவமிக்கப்படும்பொருளுமாக ஒருங்குவைத்துக்கூறப்படாத நிலையிலும், உள்ளுறையாகிய இது, உவமம்போன்று பொருள்கொள்ளப்படுதலின், இதனை

1. பாவையோ லும் வனப்புடைய பெண்ணைப் 'பாவை’ என்றாற்போன்று, உவமம் போன்று, பொருள்கொள்ளப்படும் உள்ளுறையினை உவமம் என்றமையின் இனதை ஒப்பினாகிய பெயர் என்றார். இஃது ஒப்பின னாகிய பெயர் என்பது "உவமப்போலி எனத் தொல்காப்பியனார் வழங்குதலால் கன்கு புலனாம் என்பது கருத்து. உவமம் போன்று பொருள் புலப்படுத்துவது உள்ளுறையாதலின் உவமப் போலி என்பது அதற்குரிய காரணப்பெயராயிற்று.