பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f தொல்காப்பியம்-பொருளதிகாரம்

அவையைந்துமா மாறு முன்னர்ச் (300) சொல்லுதும்: இதனது பயம் ஏனையுவமத்துக்கு நிலைக்களம் ஐந்து ஒதினான் அவ்வாறே இதற்கு நிலைக்களம் ஒதாது (305) அவை போறலின்; அவையே நிலைக்களமாமென்றலும் ஏனையுவமத்துள் ஒரு சாதி யோடு ஒரு சாதியினை-உவமித்தல் வழக்கன்றாயினும் உள்ளுறை யுவமத்திற்கு அமையுமென்றலுமென்பது. (உச)

ஆய்வுரை

இது மேற்குறித்த உள்ளுறையுவமம் ஐந்து வகைப்படும் என்கின்றது.

(இ - ள்) உவமப்போலியாகிய இவ்வுள்ளுறை ஐந்து வகைப்படும் என்பர் ஆசிரியர் (எ - று)

அவையாவன வினை, பயன், மெய், உரு, பிறப்பு என்னும் இவ்வைந்தும் பற்றிவரும் உள்ளுறைகள் என்பது அடுத்துவரும் நூற்பாவில் விரித்துரைக்கப்படும்.

தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வருஉத் திறந்த வென்பர் இல ம் ஆரம்ை

என்-எனின், மேலதற்கே.ார் புறனடை.

(இ - ள்) மேற்சொல்லப்பட்ட ஐந்தும் உரைத்த வாய்பாட்டாற் கூறும் வழிச் சொல்லப்பட்ட ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப் பின்னர்க்

கூறவேண்டும் என்றவாறு.

நினக்குவமையில்லை என்னும் வழிச் செயலானாதல் பயனா னாதல், உறுப்பான தல், உருவானாதல், பிறப்பானாதல்

1, டி. ஸ்ளுறையுனையினை வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என ஐவகையாகப் பின்வ ரும் சூத்திரத்தில் ல சித்துரை ச்கும் ஆசிரியர், 'உவமப்போலி ஜக் து' என அதன் தொகையி ை மட்டும் இச்சூத்திரத்தா ற் சுட்டியதன் பயன், சிறப்பு, லேன் , காதல் வலி, கிழக்கிடுபொருள் என ஏனை புவமத்துக்குக் கூறிய கிலைக்கள ஐக் தும் உமைப் போலிய கிய இவ்வுள்ளுறைக்குக் கூறாது போயினும் அவ்வைந்துமே இதற்கும் நிலைக்களமாம் என்பதும், ஏனையுவமத்திற் பிறப்பாகிய சாதிபற்றி உ மைங்கலறுதல் வழக்கன் றாயினும் இவ்வுள்ளுறையுமத்தில் பிறப்புப்பற்றி 2. லமித்தல் பொருந்தும் என்பதும் அறிவித்தலாம் எ ன் து பேராசிரியர் கருத்தா கு: .

+

திறத்திய லென்பு' எனப்பா டங்கொள்வர் பேராசிரியர் .