பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辛拿 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பொய்கைப் பள்ளிப் புலவு நன்று நீர்நாய் வாளை நாளிரை பெறுஉ மூர எந்நலந் தொலைவ தாயினுந் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே (ஐங்குறு. 63)

என்பது, பிறப்புவமப்போலி. நல்ல குலத்திற பிறந்தும் இழிந் தாரைத் தோய்ந்தமையசன் அவர் நாற்றமே நாறியது, அவ ரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்ட லென்பாள் அஃதெல்லாம் விளங்கக் கூறாது பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத் தோடு பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன் என்றமையின் பரத்தையர் பிறப்பு இழிந்தமையுந் தலைவி பிறப்பு உயர்ந்தமை யுங் கூறி அவன் பிறப்பின் உயர்வுங் கூறினமையின் இது பிறப் புவமப்போலியாயிற்று.

இவையெல்லாங் கருதிக் கூறிற் செய்யுட்குச் சிறப்பா மெனவும், வாளாது நீர்நாய் வாளை பெறுஉ முரனென்றதனான் ஒரு பயமின்றெனவுங் கொள்க. பிறப்பெசடு வரூஉந் திறத்த’ வென்றது தலைமகனால் இவ்வாறு திறப்பாடு வேறுமுள வென்பது உங் கொள்க. அவை,

'தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு

வெண்பூம் பொய்கைத் தவனு ரென்ப, அதனாற் றன்.சொ. லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே’’ (ஐங்குறு. 41)

என்றவழித், தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை யென்பது இன்னுந் தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று. வெண் பூம் பொய்கைத்து அவனுரென்பது தலைமகள் பசப்புநிறம் பற்றி உவமையாயிற்று. ஆதலான் வினையுவமமும் உருவுவமும் ஒரு

1. பிறப்பெகடுதருஉங் திறத்த' என்றதனால் இவ்வாறு திறப்பாடுவேறுமுள வென்பது- ங்கொள்க, என இத்தொடரைத்திருத்துக.

2. இன்னுங் என்பது இங்குத் தொடர்பின்றியெழுதப் பெற்றமையின் அதனை நீக்கிப் படிக்க,