பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் தொல்காப்பியம் - பொருளதிகாரத்

'இது மற் றெவனோ...... நமக்கே. (குறுந். 181)

இது தோழி இன்னாக்கிளவி கூறியதனை இதுபொழுது கூறிப் பயந்த தென்னெனக் காய்ந்து கூறினாள்.

பார்பக வீழ்ந்த ...... பண்டே’’. (நற்றிணை. 24)

இது செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது.

"வண்டுபடத் ததைந்த கொடியினர்

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே”, (குறுந் 21)

இது கானங் காரெனக் கூறவும் வாராரென்றவழி அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது.

"யாங்கறிந் தனர் கொல் தோழி பாம்பின்

உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி, ரமையத்

திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப்

பொறி மயி ரெருத்திற் குறுத்டைப்பேடை

பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்

தயங்க விருந்து புலம்பக் கூஉம்

அருஞ்சுர வைப்பிற்கானம்

பிரிந்துசே னுறைதல் வல்லு வோரே." {குறுந்- 154)

இது, வல்லுவோர் என்னும் பெயர் கூறித் தோழி கொடுமை:

கூறியவழி அவளையே பிரிதல்வன்மை யாங்கறிந்தனரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம்.

இனித் தோழி யிடத்துத் தலைவனைக் காயதல முதலியன வருமாறு :

'நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினு முரைய லவர் நமக்

கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய தெவனோ அன்பிலங் கடையே.' (குறுந், 93)

இக, காய் கல்.