பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கூறுவனவும், நெஞ்சினையும் பாணனையும் தாதுவிட்டுக் கூறுவன வும், வழியிடத்துப் புட்களை நொந்து கூறுவனவும், பிரிவிடை யாற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும், அவன்வாவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவனவுங் கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனொடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய குழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுதலுந், தலைவன் தவறிலனெனக் கூறுவனவும், புதல்வனை நீங்காதொழுகிய தலைவன் நீங்கிய வழிக் கூறுவனவும், காமஞ் சாலா விளமையோளைக் களவின் கண் மனந் கமை அறிந்தே னெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம்.

'அருளு மன்பு நீக்கி .....நாமே’’ (குறுந் 20)

இது, செலவழுங்சக் கூறியது. -

வெந்திறற் கடுவளி...... சென்றவாறே’ (குறுந் 39)

எறும்பி அளையிற் .....வழுங்க லுரரே? (குறுந் 12)

இவை, வழியருமை கேட்டவழிக் கூறியன.

நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையா ரென் ஒண்ணுதல் நீ வுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன் கொல் அறியே னென்னும்’ (கலி, 4)

இது, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டு கூறிற்று.

பல புகழ் .....மறவாதீமே.” (ஐங்குறு. 473)

இது, துாதுவிடக் கருதிக் கூறியது.

'சூழ்கம் வம்மோ...... பொருளே. ’’ (ஐங்குறு. 317)

இது, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது

  • மையறு சுடர்நுதல்...... பாணனதறிவே (ஐங்குறு 474)

இது, பாணனைத் துதுவிட்டுக் கூறியது.