பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళడి தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பெருங்கடல் திரையது சிறுவெண் காக்கை நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனோடு யாத்தேம் யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்நே.' (குறுந் 313)

இது, தலைவன் தவறிலனென்று கூறியது.

உடலினே னல்லேன் பொய்யா துரைமோ யாரவன் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வெளவி யோளே.' (ஐங்குறு. 66)

இது, புதல்வனை நீங்கியவழிக் கூறியது.

'கண்டைெ மல்லமோ மகிழ்நதின் பெண்டே பலரொடு பெருந்துறை மலரொடு வந்த தண் புனல் வண்ட லுய்த்தென உண கண் சிவப்ப அழுதுநின் றோளே. (ஐங்குறு. 69) இது காமஞ்சாலா விளமையோளைக் கவசவின் மணந்தமை அறிந்தேனென்றது.

வாயிலின் வருஉம் வகையொடு தொகைஇ வாயில் தன் ஏதுவாசத் தலைவிக்கு வருங் கூற்று வகையோடு கூட்டி :

வாயில்களாவார் செய்யுளியலுட் கூறும் பாணன் முதலி யோர். வகையென்ற தன.ான் ஆற்றாமையும். புதல்வனும் ஆடை

கழுவுவாளும் பிறவும் வாயிலாதல் கொள்க.

"கொக்கினுக் கொழிந்த தீம்பழம் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய வாம்பல் து.ாங்குநீர்க் குட்டத்துத் துடுமென விழுந் தண்டுறை யூரன் தண்டாப் பரத்தமை புலவா யென்றி தோழி புலவேன் பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந் துடைக்குந் தொன்றுமுதிர் வேளிர் குன்று ரன்னவென் நன்மனை தனிவிருந் தயருங் கைது வின் மையி னெய்தா மாறே.!" (நற்றிணை 280)